- ஆலிசன் கிப்பன்ஸ்
- தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
1980களிலிருந்தே கதாசிரியர்களும், கலைஞர்களும், விமர்சகர்களும், கலை வரலாற்றாசிரியர்களும் பின்நவீனத்துவத்தின் மரணத்தை முன்கூட்டியே பார்த்திருக்கிறார்கள். The Politics of Postmodernism (2002) த்தின் இரண்டாம் பதிப்பில் லிண்டா ஹட்சியன், `இது முடிந்துவிட்டது’ என அறிவித்திருக்கிறார். சமகால கட்டம் – 1989 ஆம் ஆண்டு பெர்லின் சுவர் உடைக்கப்பட்டதிலிருந்து 1990களிலும் அதற்குப் பிறகும் இதற்கான வேகம் அதிகரித்து வந்திருக்கிறது – ஒரு தனித்துவமான தீவிரத்தைக் கொண்டிருக்கிறது. பென் லெர்னரின் நாவலான 10.04ன் கதை சொல்லியின் சொற்களில் `உலகம் தன்னை மாற்றியமைத்துக் கொள்கிறது’ என்பதை நாம் கண்டறிந்து கொள்ளலாம்.
பின்நவீனத்துவம் பல்வேறு உருவங்களை எடுத்திருக்கிறது, அதன்படி, முதலாவதாக அது எதை உள்ளடக்கியது என்பது குறித்து ஒரு முழுமையான கருத்தொற்றுமை இல்லை. Postmodernism அல்லது The Cultural Logic of Late Capitalism -ல் ஃப்ரெட்ரிக் ஜேம்சன், இது ஒரு வரலாற்று இழப்பு, ஆழமும் அர்த்தமும் அற்றது என்பதோடு உணர்ச்சி ரீதியாக பாதிப்பு ஏற்படுத்துவதும் ஆகும் என்றார். பிரையன் மெக்ஹாலே, Postmodernist Fiction (1987) ல் பின்நவீனத்துவம் என்பது மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சியுடனான மோகத்தில் இருப்பதாக – வரையறுக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தார். இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, பின்நவீனத்துவம் என்பது அடிப்படையாக உண்மையான உலகையும், பிரதிநிதித்துவ செயல்திறன் மற்றும் புனைவின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
பின்நவீனத்துவத்தை உந்திச் சென்ற சக்திகள் இப்போது குறைந்துவிட்டன. பின்நவீனத்துவம் மதம், முன்னேற்றத்தின் கோட்பாடு மற்றும் வரலாறு உட்பட பெருங்கதையாடலையெல்லாம் நிராகரித்து விட்டது. ஏஞ்சலா கார்ட்டரின் புனைவு, குறிப்பாக The Bloody Chamber, வழக்கமான பின்நவீனத்துவ உந்துதலுக்கான ஒரு தெளிவான உதாரணமாகும்: பாரம்பரிய தேவதைக் கதைகளை மீண்டும் எழுதும் போது அவர் பாலினம், பாலியல் மற்றும் பெண்ணின் அக உணர்வு ஆகியவை குறித்த பெருங்கதையாடலை நிலைகுலையச் செய்திருக்கிறார். அதற்கு மாறாக, இன்றையக் கலாச்சாரச் சூழலில் வரலாற்றுடனான ஈடுப்பாட்டைப் புதுப்பிப்பது போலவும், புராணத்தின் அர்த்தத்தை புத்துயிர்ப்பு செய்வது போலவும் ஒரு தோற்றம் தெரிகிறது. இதை பின்நவீனத்துவத்துவ எதிரிகள் வெறுத்திருக்கக்கூடும். உதாரணமாக, Ruth Ozeki யின் `A Tale for the Time Being (2013)’, ஒன்றோடொன்று தொடர்புடைய வரலாறுகளை தொடர்புபடுத்துகிறது – அவற்றில் ஒன்று இரண்டாம் உலகப் போர் கதையான Japanese Kamikaze Pilot –ம் 2011 ஆம் ஆண்டு கதையான Tohoku Earthquake and Tsunami – ம் ஆகும். ஜென் புத்த மதத்தின் கொள்கைகளை பிரதிபலிப்பதின் மூலம் இரண்டுமே சிந்தனைகளின் வரலாற்றில் சூழ்நிலைக்கு உட்பட்டதாக இருக்கிறது.
பால் ஆஸ்டர் போன்ற எழுத்தாளர்கள் அவர்களுடைய புனைவு பிரபஞ்சங்களில் தோற்றமளிக்கிறார்கள் அல்லது ஜூலியோ கொர்த்தஸார் -ன் சிறுகதையான `The continuity of Parks’ போல அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உட்பொதிக்கப்பட்ட கதையை கண்டுபிடிப்பதற்கு மட்டும் கதாபாத்திரங்கள் கதைகளை படிப்பது, யதார்த்தத்தை ஒரு முடிவற்ற மொழி விளையாட்டுகளாக பின்நவீனத்துவம் சிதறடித்தது. முதல் பார்வையில், புனைவுக்கும், யதார்த்தத்துக்கும் இடையேயான கோட்டை தெளிவற்றதாக ஆக்குவதற்கு டேவிட் ஷீல்ட்ஸ் தன்னுடைய புத்தகமான Reality Hunger (2010) ல் சொல்வது போல இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் இதே போன்ற உந்துதலை செய்து காண்பிக்கிறார்கள். எழுத்தாளர்கள் அல்லது மற்ற உண்மைக் கூறுகள், இப்போது புனைவுகளில் தோற்றமளித்தாலும் கூட – 10:04 ல் பென் லெர்னர் செய்தது போல – அவர்களது இருப்பு உரையின் கலைத்திறனை முன்னிலைப்படுத்துவதை காட்டிலும், யதார்த்தத்தை சமிக்ஞை செய்வதற்கான நோக்கம் கொண்டதாகும். உண்மையில், பின் நவீனத்துவத்தின் பற்றின்மைக்கும், மண்ணியல்பு சார்ந்த கொள்கை எதிர்ப்புக்கும் யதார்த்தம் மீண்டும் பிரபலமானதாக இருக்கிறது. இலக்கியப் புனைவுகளில் உணர்ச்சிகள், இன்னும் அதிகமாக, மறுபடியும் மையப் பாத்திரமாக இருக்கிறது. ஆசிரியர்கள் நமது அத்தியாவசிய பகுத்தறிவை வற்புறுத்துவது போல – இந்த உலகமயமாக்கல் உலகில் மனிதர்களாகிய நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டிருப்பது போல புனைவு கதாபாத்திராங்களும் நம்மை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஆதிக்கம் செலுத்தும் கலாச்சார தர்க்கம் எழுச்சி பெறுவது போல தோன்றுகிறது; உலகம் – அல்லது எந்த விஷயத்திலும் இந்த இலக்கிய பிரபஞ்சம் – தன்னைத்தானை மீண்டும் சரி படுத்திக் கொள்கிறது. இந்த செயல்முறை இன்னும் உறுதி படுத்தப்படாமல் இருப்பதால் இதைக் கண்டிப்பாக நிகழ்காலத்தில் அணுக வேண்டும். சூழ்நிலையைப் புரிந்து கொள்ள, நாம் எண்ணற்ற கேள்விகளைக் கேட்கவேண்டும். முதலாவதும், வியக்கத்தக்கதுமானதும், `பின்நவீனத்துவம் இறந்து விட்டதா?” அதைத் தொடர்ந்து `அப்படியென்றால், எப்போது அது இறந்தது?” Christian Moraru, Josh Toth, Neil Brooks, Robin van den Akker and Timotheus Vermeulan போன்ற விமர்சகர்கள் திரும்பத்திரும்ப 1989 ஆம் ஆண்டு பெர்லின் சுவர் உடைக்கப்பட்டதையும், 9/11 தாக்குதலையும் – பயங்கரவாதத்தின் மீதான போர், மத்திய கிழக்கில் நடைபெற்ற போர்களையும், பொருளாதார நெருக்கடியையும், தொடரும் உலகப் புரட்சியையும் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டால், அமைப்பு ரீதியில் உலக முதலாளித்துவத்தின் தோல்வியையும், சமநிலையற்ற தன்மையையும் குறிப்பதோடு, புதிய தாரளவாத திட்டமும், அரசியல் ரீதியிலான தீவிர இடது மற்றும் வலதுசாரி பிளவுகளும் தொடர்ந்து ஏமாற்றத்துக்கு வழிவகுக்கிறது. இந்த நிகழ்வுகளின் ஒட்டு மொத்த விளைவு – 24 நான்கு மணி நெர செய்திகள் மூலம் வரக்கூடிய மிகுந்த பதட்டமும் – மேற்கத்திய உலகை நிலையற்ற, தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிற இடமாக உருவாக்கியிருக்கிறது. இனியும் இதில் நம்முடைய பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து ஆர்வமற்றவர்களாக இருக்க முடியாது.
அரசியல் ரீதியில் வீரியம் பெற்ற `post-truth’ என்கிற சொல்லை 2016 ஆம் ஆண்டுக்கான சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தெரிவு செய்தது என்னைப் பொருத்தவரை சரியானது என்றே தோன்றுகிறது. இந்தச் சொல்லின் பரவலாக்கம் – குறிப்பாக தற்கால அரசியல் சூழ்நிலையோடு (ட்ரம்ப், ப்ரெக்ஸிட், பொதுவாக ஆளுமை அரசியல்) தொடர்பு கொண்டிருக்கிறது – உண்மை என்கிற கருத்தின் மீது தற்கால அணுகுமுறையின் குறியீடாகும். நடந்து கொண்டிருக்கும் தீவிர கலாச்சார மாற்றங்கள் பற்றி சிந்திப்பதற்கு நமக்கு இது உதவும். இறுதியாக கற்பனாவாதத்தின் மீது நவீனத்துவம் கட்டமைக்கப்படுகையில் சில பெரும்பான்மையான உண்மைகளை அது நிலைநிறுத்தியது, பின்நவீனத்துவம் உண்மையின் கருத்து அனைத்தையும் நிராகரித்ததோடு மாற்றியமைத்தது. இதில் இருக்கும் முன்னொட்டான “ பின்” என்பது இது எந்தக் கோட்பாட்டை நிராகரிக்க வேண்டும் எனச் சொல்கிறதோ அதன் மீது மிகவும் அதிகமான கவனம் செலுத்துவது முரண்பாடான ஒன்றாகும். இந்தச் சொல்லின் இரண்டு கூறுகள் தற்போதைய நிலைபாட்டுக்கான ஆகு பெயராக இருக்கிறது: `பின்’ என்பது பின்நவீனத்துவத்துவ நம்பிக்கையின்மை நீடித்திருப்பதைப் பிரதிபலிக்கும் அதே வேளையில் `உண்மை’ என்பது முக்கியமான உரைகல்லாக இருக்கிறது.
இந்தக் கலாச்சார தர்க்கத்திற்கான இடத்தைப் பிடிக்க பல சொற்கள் இருக்கின்றன; அவற்றில் சில – altermodernism, cosmodernism, digimodernism, metamodernism, performatism, post-digital, post-humanism மற்றும் கனமான பின் – பின்நவீனத்துவம் ஆகும். இந்தக் கருத்துருவாக்கத்திற்குள் ஒற்றுமையும், வேறுபாடுகளும் இருக்கும்; அவை ஒன்றோடு ஒன்று முரண்படுவது போல ஒத்தும் போகும். இருந்தாலும் கூட, இந்த அமைப்புகளிடையே இசைவானது நவீனத்துவ, பின் நவீனத்துவ பாணியிலான நடைமுறையின் மரபும் புனர்வாழ்வு பெற்ற நன்னெறி உணர்வும் ஆகும். லெர்னரின் 10.04 ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறது. ஒரு அத்தியாயத்தில், கதை சொல்லி பென், பார்க் ஸ்லோப் கூட்டுறவுச் சங்கம் ஹெல்த் ஃபுட் ஸ்டோரில், (புதிய ஆர்கானிக் மற்றும் உள்நாட்டில் விளைந்த விளைபொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனையகம்) அவருடைய மாதாந்திர முறைப்பணியை அப்போதுதான் முடித்திருந்தார். கூட்டுறவுச் சங்கத்தில் இருக்கும் மற்றவர்களைப் போல பென்னும் அதனுடைய சுற்றுச்சூழலிலும், முதலாளித்துவத்துக்கு எதிரான பண்பாடு குறித்தும் பெருமைப்பட்டாலும், அவருடைய சொந்தப் பயணத் திட்டத்தை இணைத்துக் கொள்வதில் நெகிழ்வுத்தன்மையில்லாமல் இருந்தது குறித்து ஏமாற்றமடைந்தார். உலர்ந்த மாம்பழங்களை மூட்டை கட்டிக் கொண்டிருந்தபோது, நூர் என்கிற சக உறுப்பினர், தான் யாரை அப்பா என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அவர் உண்மையிலேயே எனக்கு உயிரியில் ரீதியிலான அப்பா இல்லை என்று தெரிவித்தார். இது `தான்’ என்கிற உணர்வில் குறிப்பிட்ட தாக்கங்களை ஏற்படுத்தியது குறிப்பாக அவரது அரபு -அமெரிக்கன் அடையாளம் அவருடைய அப்பாவின் லெபனானியப் பாரம்பரியத்தை வைத்து கண்டறியப்பட்டிருந்தது.
தனிப்பட்ட முறையில் தீவிரமாகவும், இயல்பை பாதிக்கக்கூடியதாகவும் நூர் கதை இருந்தாலும் அது பல குறுக்கீடுகளைக் கொண்டிருந்தது. “நூர் சொன்னார், இந்த வார்த்தைகளில் இல்லாவிட்டாலும் கூட” என கதைசொல்லி, திரும்பத்திரும்ப விவாத உட்பிரிவுகள் மற்றும் கதைசொல்வதில் இடையூறு என இடைமறித்துக் கொண்டிருந்தார். இதில் பின்நவீனத்துவம் ஒரு கருவி, மறுபரிசீலனை செய்து ஒரு கதைக்குள் கதையை முன்வைக்கிறது; இன்னும் அது சுயபிரதிபலிப்பு பாதிப்புக்கு உதவாவிட்டாலும் நம்முடைய நினைவுகளிலும் சுயவிளக்கங்களிலும், மற்றவர்களுடன் ஆன நம்முடைய உறவு முறையிலும், விளக்கக் கோட்பாட்டு (hermeneutic) செயல்பாட்டின் கதையைக் காண்பிக்கிறது. கதை குறுக்கீடு கூட இருக்கிறது, நூரின் கதை எப்படி முடிந்ததென்று தெரியாமல், பென் தவறாக ஒரு முடிவுக்கு வந்து, அது இஸ்லாமோபோஃபியா என்றார். லெர்னருடைய கதைசொல்லி கதாபாத்திரம், தன்னேர்மையுடையதாக இருந்தாலும் குறைபாடு கொண்டதாக இருந்தது, பரவலாக இருக்கும் மேற்கத்திய சமூக போலித்தனத்தின் சின்னமாக பார்க்கப்பட்டதோடு துல்லியமாக மிகவும் மோசமானதாக இருந்தது. ஏனெனில், ஆசிரியரின் பிரதி ஆளாக வாசகர்கள் கதாபாத்திரத்தை விவரிக்க வேண்டியிருந்தது. இது மறுபடியும் பின்நவீனத்துவ மெட்டா உரைத்திறனாகத் தோன்றினாலும் – புனைவில் ஆசிரியரின் கதாபாத்திரம் – அது பின்நவீனத்துவ விளைவுக்குப் பயன்படுத்தியிருக்கவில்லை. பொதுவாக எழுத்தாளரின் பின்நவீனத்துவத் தோற்றம் புனைவில் அவர்களுடைய இருப்பு மெய்ப்பொருள் ரீதியில் சாத்தியமற்றது என்பதன் மூலம் அவரை ஒரு மொழியியல் குறியீடாகக் குறைத்துவிடும். மாறாக, லெர்னருடைய ஆசிரியர் புனைவில் துல்லியமாக இருக்கிறார்.
பிறகு நூரின் கதையை பிரதிபலிக்கையில், ‘கூட்டுறவுச் சங்கத்தின் முட்டாள்தன ஊகம் இல்லாமல்’ ஏதாவது ஒரு முறையில் அவளை சமாதானப்படுத்தியிருக்கலாம் என பென் விரும்பியிருக்கிறார். பென் அவருடைய உணர்வுகளை, ‘என்னுடைய ஆளுமை ஒரு நபர் என்கிற நிலைக்கு மாறும்போது அதிலிருக்கும் ஒவ்வொரு அணுவும் எனக்குரியது போலவே நூருக்கு உரியதாகும், அவரைச் சுற்றி புனைவுலகம் தன்னை சீரமைத்துக் கொள்கிறது.” 10.04 ல் , உலகின் இந்த மறுசீரமைப்பு நெருக்கமாகவும், ஒழுக்கரீதியிலும் சிந்தித்ததை மனித உள்ளுணர்வுகளின் அச்சைத் திருப்பும்.
பின்நவீனத்துவத்துக்கு அப்பால் உணர்வை முன்வைக்கும் தற்கால புனைவுக்கு 10.04 ஒரு உதாரணமாகும். இதை ‘ஆட்டோ-ஃபிக்ஷன்’ என வகைப்படுத்தலாம். சுயவரலாற்றையும் புனைவையும் சேர்க்கும் இந்த வகை எழுத்துக்கள் நினைவுக் குறிப்புகள் வகையோடு சேர்ந்து மலர்ந்தது. இந்த வகை எழுத்துக்கள், கதைமாந்தர்களை சிறு சிறு பிரிவுகளாக பிரிப்பதோடு, உண்மைக்கும் புனைவுக்குமான மெய்ப்பொருள் எல்லையை மங்கலாக்குவது போல முதன் முதலில் பார்க்கும் போது தோன்றுவதால் உறுதியாக பின்நவீனத்துவம் என்றே தோற்றமளிக்கும். இருந்தாலும் தற்கால ஆட்டோஃபிக்ஷன் கதை அது எழுதுபவரை ஒரு விளையாட்டாக சித்தரிக்காமல் பிரதியின் யதார்த்ததை மேம்படுத்துவதாகவும், தனிப்பட்ட வாழ்க்கையினுடைய சமூக மற்றும் நிகழ்வுகளின் பரிமாணங்களை சமாளிப்பது போலவும் அமையும். Edouard Louis னுடைய `The End of Eddy (2017)’ ஓர் உதாரணமாகும். வடக்கு பிரான்சில் ஒரு சிறிய உழைக்கும் வர்க்க கிராமத்திலிருக்கும் ஆண் தன்மையற்ற இளைஞனாக ஆசிரியருடைய சொந்த அனுபவத்தை புனைவு மூலம் விளக்குகிறார்.
வரலாற்றுப் புனைவுகளின் புகழ், யதார்த்தத்தின் மறுமலர்ச்சி, விஷுவல், டிஜிட்டல் பண்பாட்டுடன் புனைவின் அதிகமான ஈடுபாடு ஆகியவை இந்த மாற்றத்திற்கான சின்னமாகும். பின்நவீனத்துவத்தின் முரணான பாப் கலாச்சாரத்துக்கு எதிராக ‘ஆயுதங்களுக்கு’ அழைப்பு விடுத்த டேவிட் ஃபாஸ்டர் வாலஸை ஓர் இலக்கிய ஆளுமையாகக் குறிப்பிடும் நேரத்தில், இந்தத் தவறை அதிகரிப்பது போல தோன்றும் மற்ற பல தற்கால எழுத்தாளர்கள்: Ben Lerner, Jennifer Egan, Dave Eggers, Joshua Ferris, Jonathan Franzen, Sheila Heti, Kazuho Ishiguro, Ruth Ozeki, Ali Smith, Zadie Smith and Adam Thirlwell. உதாரணமாக Thirlwellனுடைய Kapow! (2012) அரபு வசந்தம் என்கிற புரட்சியுடன் ஈடுபாடு கொண்டிருப்பதோடு அதனுடைய வரலாற்றையும், முக்கியத்துவத்தையும் ஃப்ரெஞ்ச் புரட்சியுடன் ஒப்பிட்டு விசாரணை செய்கிறது. இந்தச் செயல்பாட்டில், சுய உணர்வு கொண்ட கதைசொல்லி, ஏற்ற இறக்க பண்பாட்டு மேற்கோள்களைக் கலந்து, உலகநிகழ்வுகளின் ஊடக அறிக்கையை உணர்த்துவதோடு அவருடைய சொந்த அரபு நாவலை எழுதுவதற்கும் பொருத்தமானதாகக் கருதுகிறார்.
அதே நேரத்தில், முந்தையத் தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதிய பல கருத்துகளையும், அக்கறைகளையும் நமது கலாச்சாரம் வைத்திருக்கிறது; பழையதை உதறியெறியும் அளவுக்கு புரட்சிகரமான இலக்கியம் மிகவும் குறைவுதான். சில விமர்சகர்கள் உறுதியாகக் கூறுவது போல பின்நவீனத்துவம் இன்னும் முடிந்து விடவில்லை ஆனால் பின்வாங்குவது போல தோன்றுகிறது. இதனுடைய கருவிகள் பொதுவெளியில் இருப்பதால் பிரதான, வணிக மற்றும் பிரபலமான கலச்சாரங்களினால் ஏற்றுக் கொள்ளப்படும். பின்நவீனத்துவம் சந்தையை மிகைப்படுத்தியதால் அதன் மதிப்பை ஓரளவு இழந்துள்ளது. பின்நவீனத்துவத்தின் விளையாட்டுத் தனம் மற்றும் தாக்கம் முடிவுற்றதால், உண்மையான உலகப் பிரச்சனைகளோடு ஆர்வமுடன் ஈடுபட்டு இலக்கியத்தைக் கட்டமைக்க நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். எளிதாக ஒருவரது கண்ணை மூடிக்கொள்ளச் செய்யும் சிக்கலான, எப்போது மாறிக் கொண்டிருக்கும் நெருக்கடிகளான, இன சமத்துவமின்மை, முதலாளித்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை இந்தப் புதிய இலக்கியம் நல்லதொரு நம்பிக்கையில் பரிசீலிக்க முடியும்.
ஆலிசன் கிப்பன்ஸ் (Alison Gibbons), இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் Contemporary Stylistics படிப்பவர். சமகால ஸ்டைலிஸ்டிக்ஸ் என்பது நூல்கள் மற்றும் அவற்றிலிருந்து உருவாகும் அனுபவங்களை பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு இலக்கிய விமர்சன முறை ஆகும். அவரது ஆராய்ச்சி புதுமையான மற்றும் சமகால கதைகளுக்கு ஒரு ஸ்டைலிஸ்டிக் அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்றுகிறது மற்றும் அவர் பல பத்திரிகை கட்டுரைகள் மற்றும் புத்தக அத்தியாயங்களில் சர்வதேச அளவில் வெளியிட்டுள்ளார், மற்றும் Notes on Metamodernism என்கிற இணைய ஆய்வு இதழின் ஆசிரியராக உள்ளார்.
**
நன்றி : THE TIMES LITERARY SUPPLEMENT
