- ரிச்சர்ட் ஃப்ளாநகன் உடன் ஒரு நேர்காணல்
- நேர்காணல் கண்டவர் : அந்தோணி கம்மின்ஸ்
- தமிழில் : துருவா வாசுதேவன்
டாஸ்மேனியன் நாவலாசிரியரான, ரிச்சர்ட் ஃப்ளாநகன், 63, ஜப்பானிய போர்க் கைதியாக இருந்த அவரது தந்தையின் அனுபவங்களை முன்வைத்து எழுதப்பட்ட தனது ஆறாவது நாவலான The Narrow Road to the Deep North, 2014 புக்கர் பரிசை வென்றுள்ளது. மேலும் புகழ் பெற்ற நடிகரான Jacob Elordi நடிக்கும் டிவி தொடராகவும் மாற உள்ளது. அவரது சமீபத்திய நூலான, Question 7 , இந்த ஆண்டின் (நவம்பர் 19 அன்று வழங்கப்படும்), புனைகதைக்கான பெய்லி கிஃபோர்ட் பரிசின் இறுதிப் பட்டியலில் உள்ளது மேலும், நாவல்களுக்கான பரிசான பிரான்சின் பிரிக்ஸ் ஃபெமினா எட்ரேஞ்சருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த வருடத்திற்கான, புகழ்பெற்ற HG வெல்ஸ் விருதுத் தேர்வுக்கான பட்டியலிலும் உள்ளது. புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நாவலாசிரியரான பீட்டர் கேரி, “இது ஒரு eccentric toolkit ஐப் பயன்படுத்துகிறது – ஒரு பாதி நினைவகமாகவும், மறுபாதி வரலாறாகவும் – வேறு எதையும் போலல்லாமல், மிகுந்த வித்தியாசமான நூலாக உருவாக்கம் எடுத்திருக்கிறது..” என்கிறார்.
***
Question 7 என்பது வரலாறு, சுயசரிதை மற்றும் “ஆட்டோ பிக்சன் ” ஆகியவற்றைக் கலக்கும் வகையை மீறும் புத்தகம். காதலைப் பற்றி நாம் எடுக்கும் தேர்வுகள் மற்றும் அதன் பின்விளைவுகளை ஆராயும் ஒரு நினைவுக் குறிப்பு இது. ஜப்பானின் உள்நாட்டுக் கடலில் உள்ள ஒரு காதல் ஹோட்டலில் தொடங்கி டாஸ்மேனியாவின் ஒரு நதியில் முடிவடையும் நிகழ்வுகளின் சங்கிலிக்கோர்வை..
அணுகுண்டு வீசப்பட்டபோது, ஹிரோஷிமா அருகே அடிமைத் தொழிலாளியாகப் பணிபுரியும் ஃபிளாநகனின் தந்தையின் எண்ணங்கள், 1930களின் அணுக்கரு இயற்பியல், *ஹெச்.ஜி. வெல்ஸ் மற்றும் யுத்த கால நிகழ்வுகளை எழுதும் பிரிட்டிஷ் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ரெபெக்கா வெஸ்ட் இடையேயான 10 வருட சர்ச்சைக்குரிய உறவு, பல கணினிகளை இணைக்கும் daisy chain – ன் கண்ணிகளில் ஒரு இளைஞனாக சிக்கிக் கொள்ளும் ஃபிளாநகன், ஒரு காட்டு ஆற்றில் அவர் வாழ வேண்டுமா அல்லது இறப்பதா என்று தெரியாமல் ஓடும் ஒரு நீர்நிலையின் வேகம்.
அவரது தீவு வீட்டிற்கும் அவரது பெற்றோருக்கும் ஒரு காதல் பாடல், கனவு, வரலாறு, இலக்கியம், இடம் மற்றும் நினைவகம் ஆகியவற்றின் இந்த ஹிப்னாடிக் கலவையானது யதார்த்தவாதிகளால் ஒருபோதும் யதார்த்தத்தை உருவாக்க முடியாது என்பதுவும், மற்றவர்களின் கதைகளிலிருந்து நம் வாழ்க்கை எவ்வாறு எழுகிறது என்பதைப் பற்றிய புத்தம் புதிய எழுத்துமுறை.
*வெஸ்ட் அண்ட் வெல்ஸின் விவகாரம் கொந்தளிப்பான பத்து வருடங்கள் நீடித்தது. ஹெச்.ஜி. வெல்ஸின் “Marriage” என்னும் நாவலுக்கு ஆத்திரமூட்டும்படியான மிகவும் மோசமான விமர்சனத்தை ரெபெக்கா வெஸ்ட் Freewoman என்ற பெண்ணிய இதழில் எழுதியிருந்தார். அந்தச் சூழ்நிலையில், அவளை இரவு உணவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார் வெல்ஸ். அப்பொழுது வெஸ்ட் 19 வயதில் இருந்தார். அதன்பிறகு, அவர்களுக்குள் காதல் உருவானது. அவர்களது திருமணத்திற்கு வெஸ்டின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், வெல்ஸ், ஏற்கனவே ஜேன் என்பவரை மணந்திருந்தார், மேலும் அவர் வெஸ்ட்டை விட 26 வயது மூத்தவர். ஆனாலும் எதிர்ப்பை மீறி அவர்களின் நட்பு தொடர்ந்தது. பத்தாண்டுகள் முழுவதும், வெஸ்டின் குடும்பத்தினர், வெல்ஸை திருமணம் செய்துகொள்ளும்படி அல்லது அவரிடமிருந்து பிரிந்துகொள்ளும்படி வற்புறுத்தினார்கள். வெல்ஸ் தங்கள் உறவைத் தொடர விரும்புவதாக பதிலளித்தார். ஒரு பாலியல் புரட்சியாளர் என்று சொல்லப்படும் வெல்ஸ், ஜேனை விவாகரத்து செய்ய விரும்பவில்லை மேலும் வெஸ்ட் உடனான உறவை அப்படியே தொடர்ந்தார். அவர்களுக்கு 1914 இல் அந்தோனி பாந்தர் வெஸ்ட் என்ற மகன் பிறந்தார். (மொ.பெ.)
***
Question 7 நூல், புனைகதை பரிசு மற்றும் புனைகதை அல்லாத பரிசுக்கு வருவதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் ?
மகிழ்ச்சியடைந்தேன். லேபிள்கள் ஜாம் ஜாடிகளுக்கானவை.
அதை எழுத உங்களைத் தூண்டியது எது?
2022 ஆம் ஆண்டில் முதுமை மறதி நோய் ஆரம்பமாகி விட்டதாகத் தவறாகக் கண்டறியப்பட்டது. அது தீவிரமாகத் தொடங்குவதற்கு 12 மாதங்களுக்கு முன்பே எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த 12 மாதங்களில் நான் புத்தகம் எழுதினேன். முடிந்ததும், அது அறிவாற்றல் வீழ்ச்சியின் அறிகுறிகளைக் காட்டுகிறதா என்று எனது நூல் பதிப்பாளரிடம் கேட்டேன்; அவ்வாறு இருந்தால், அதை வெளியிடுவதை நான் பார்க்க விரும்பவில்லை. அவர் சிரிக்க ஆரம்பித்தார். நரம்பியல் நிபுணர் அதன் கருத்தை உறுதிப்படுத்தினார்.
புத்தகத்தின் பல நூல்களில் எது முதலில் வந்தது?
ரெபேக்கா வெஸ்ட், ஹெச். ஜி. வெல்ஸை முத்தமிடுவதில் தொடங்கி, ஹிரோஷிமாவில் 100,000 பேர் இறக்கவும், என் தந்தை வாழ்ந்து, நான் பிறக்கவும் வழிவகுத்த சங்கிலிக் கண்ணிகளாக, எதிர்வினையாக புத்தகத்தை எழுதும் எண்ணம் வந்ததும் – அந்த முத்தம் இல்லாமல், எதுவும் இல்லை என்று நான் புரிந்து கொண்டவுடன். வெடிகுண்டு மற்றும் நான் இல்லை – பின்னர் நீண்ட காலமாக என்னை வேட்டையாடிய வேறுபட்ட விஷயங்கள் எனக்குள் வந்து விழுந்தன. என் பெற்றோரைப் பற்றி நான் அதிகம் யோசித்தேன், அவர்கள் உலகில் அர்த்தமற்றவர்கள் என்று தெரிந்திருந்தாலும், என் தீவு வீடு கிழிந்த பயங்கரங்களுக்கு அன்பின் கருத்தை வலியுறுத்தியது, அவர்களின் இருப்பு தான்.
வெல்ஸின் The War of the Worlds நாவல், உங்கள் கதைக்கு முக்கியமானது. முதன் முதலில் படித்தது நினைவிருக்கிறதா?
எனக்கு கதை தெரியும் என்று நினைத்தேன் – 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் அதை முதன் முதலில் படித்தபோது, அது பழங்குடியினரான டாஸ்மேனியர்களை அழித்ததன் மூலம் ஈர்க்கப்பட்டது என்பதை வெல்ஸின் அறிமுகத்தில் அறிந்து பிரமித்துப் போனேன். இது ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மீதான குற்றச்சாட்டு!
நீங்கள் அமைதியற்ற எழுத்தாளரா? உங்கள் புத்தகங்கள் ஒன்றுக்கொன்று ஒத்திருக்கின்றன, முக்கியமாக அவற்றின் வித்தியாசத்தில்…
எனக்கு எளிதில் சலிப்பாக இருக்கிறது. இழந்ததை மட்டும் கணக்கில் கொள்ளாமல், பெற்றதை பிரதிபலிக்கும் படிவங்களை நான் தேடுகிறேன்.
WG Sebald க்குப் பிறகு ஆங்கில மொழிப் புனைகதைகள் எடுத்துள்ள கவனக்குறைவான திருப்பத்தால், இந்த நேரத்தில், நீங்கள் ஈர்க்கப்பட்டீர்களா ?
நாகரீகங்கள் வந்து போகும். இந்த புத்தகத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமானது இலக்கியம் அல்ல, வாழ்க்கை. கோவிட் சமயத்தில், நம் அனைவருக்குமான வாழ்க்கை நிறுத்தப்பட்டதாகத் தோன்றியது. எனக்கு எஞ்சியிருந்த கேள்வி: நாம் வாழ விரும்புகிறோமா அல்லது இருப்பதில் மட்டும் திருப்தியடைகிறோமா? மேலும் அந்தக் கேள்வி பலரை வேட்டையாடியது என நினைக்கிறேன்.
நீங்கள் கதைக்களம் மற்றும் பாத்திரம் பற்றிய நாவல்களை எழுதத் திரும்புவீர்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் மீண்டும் எழுதுவேன் என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வளவு காலமாக என்னைத் தூண்டியது எதுவாக இருந்தாலும், குறைந்தபட்சம் இப்போதைக்கு. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் அமைப்பில் கலந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
The Narrow Road to the Deep North தொலைகாட்சி தொடராக வரவிருக்கிறது. வரவிருக்கும் அதன் தொலைகாட்சித் தழுவலில் உங்கள் பங்கு என்ன ?
நான் நிர்வாகத் தயாரிப்பாளர். எனது நாவலுக்கு உண்மையாக விசுவாசம் காட்டுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. நான் மதிக்கும் (Justin Kurzel) ஒரு நல்ல இயக்குனரைப் பெற விரும்பினேன், மேலும் அவர் என்னுடைய படைப்பில் எதைக் கண்டாலும் அதை உத்வேகப்படுத்தி தனது சொந்த படைப்பை உருவாக்கட்டும். ஜஸ்டினை ஆதரித்து என் வேலையை நான் பார்த்தேன்.
முன்னணி நடிகரான ஜேக்கப் எலோர்டி. Saltburn -ல் நீங்கள் என்ன செய்தீர்கள் ?
ஜேக்கப்பின் நான் பார்க்காத ஒரு படம், Saltburn. நான் ஆக்ஸ்போர்டைப் பற்றி அதிகம் ஈர்க்கவில்லை (80களில், ஃப்ளாநகன் ரோட்ஸ் நிதியுதவி பெற்ற முதுகலையாளராக இருந்தார்) அதன் கற்பனையான பிரதிநிதித்துவங்களால் கவரப்பட்டேன்.
உங்கள் வாழ்க்கையில் அந்தக் காலகட்டம் Question 7 இல் வருகிறது , அங்கு நீங்கள் மெல்லியதாக மறைந்திருக்கும் போரிஸ் ஜான்சனை எதிர்கொள்கிறீர்கள் …
சில விஷயங்கள் 1980களின் ஆக்ஸ்போர்டின் வெற்றிடத்தை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன.
சிறுவனாக இருந்தபோது உங்களுக்குப் பிடித்த புத்தகங்களில் The Wind in the Willows புத்தகம் என்றும் Question 7 – ல் குறிப்பிடுகிறீர்கள். ஏன்?
என் அம்மா எனக்குப் படித்துக் கொடுத்ததால் என்று நினைக்கிறேன். அவள் அதை விரும்பினாள், நான் அவளை நேசித்தேன். எல்லா இடங்களிலும் ஒரு பெரிய மழைக்காடு, மழை மற்றும் ஆறுகளுக்கு நடுவில் போருக்குப் பிந்தைய அகதிகள் நிறைந்த மிக தொலைதூர, சிறிய சுரங்க கிராமத்தில் நாங்கள் வாழ்ந்தோம். மிகவும் வித்தியாசமான மனிதர்களை இணைக்கும் நதி, காட்டு காடுகளில் வீடுகளை வைத்திருக்கும் மக்கள்… இவை அனைத்தும் எப்படியோ நன்கு தெரிந்தது. அவள் மிகவும் கடினமான மொழியையோ அல்லது அத்தியாயங்களையோ குறைக்கவில்லை – அதன் மர்மம் அப்பாற்பட்ட உலகின் மர்மமாகத் தோன்றியது.
பள்ளிக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் போது தாக்கத்தை ஏற்படுத்திய முதல் நாவலின் பெயரைக் குறிப்பிடவும்.
Albert Camu – ன் The Outsider, 11 அல்லது 12 வயதில். நான் புதிதாகத் தொடங்கிய மாநில உயர்நிலைப் பள்ளியில் புத்தக ஸ்டாண்டில் இருந்தது. நான் சற்று உயரமாக இருந்ததால் எடுத்தேன். எனக்கு கிட்டத்தட்ட எதுவும் புரியவில்லை. ஆனால் வெப்பம், கடற்கரை, திடீர் வன்முறை, உங்கள் பாசாங்குத்தனத்தை கோரும் உலகம்… இவை அனைத்தும், நான் அறிந்த அதிர்ச்சியுடன், உண்மையென்று அறிந்தேன்.
நீங்கள் இப்போது என்ன படிக்கிறீர்கள்?
Erotic Vagrancy – எலிசபெத் டெய்லர் மற்றும் ரிச்சர்ட் பர்ட்டன் பற்றிய ரோஜர் லூயிஸின் அடிமைத்தனமான கணக்கு. 60 வருடங்களாக Taylor Swift மற்றும் Travis Kelce – ல் நாம் மிகவும் மயங்கி இருக்கிறோமா?
ஆஸ்திரேலியாவின் நேஷனல் போர்ட்ரெய்ட் கேலரியில், நியூ யார்க்கர் உங்களைப் பற்றி எடுத்த ஒரு குறும்படத்தில் முன்பு உங்கள் மேசையில் அமர்ந்திருந்த உங்கள் கிளி – Herb -உடன் உங்களைப் பற்றிய 2018 ஓவியம் உள்ளது. அவர் இன்னும் இருக்கிறாரா?
Karl Ove Knausgård – டை (நார்வே எழுத்தாளர்) macaw (வர்ணக்கிளி)வுடன் கற்பனை செய்வது கடினம் அல்லது sulphur-crested cockatoo -வுடன் (மஞ்சள்கொண்டை கிளி) Sally Rooney -யை (ஐரீஷ் எழுத்தாளர்) கற்பனை செய்வது கடினம், ஆனால் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு Herb தேவை, மதிப்பிட முடியாத நகைச்சுவையின் அற்புதமான துணை, அவர் ஒருமுறை என் கீபோர்டில் பறந்து, சிறகுகளை அடித்து ஒரு அத்தியாயத்தை அழித்தார்; ஃபோன் அடிக்கும் ஒவ்வொரு முறையும் “get fucked” என்று கத்தியபடி நடனமாடியவர்; என் புத்தகங்கள் மற்றும் மெத்தை இருக்கைகளைத் துண்டாடியவர், கட்டிப் பிடித்தபடி என் மார்பில் பறந்தவர். இப்போது அவர் போய்விட்டார். நான் இன்னும் வருத்தப்படுகிறேன்.
***
நன்றி : The Guardian (Sat 16 Nov 2024)
