- ஆல்பெர் காம்யு நோபல் பரிசு ஏற்புரை
- தமிழில்: அப்பணசாமி
தங்களது சுதந்தரமான அமைப்பு மிகவும் தாராளமனதுடன் என்னைக் கௌரவப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த விருதை நான் பெறும்போது, எனது மனமகிழ்ச்சி அறிவார்த்தமாக விரிவடைகிறது. குறிப்பாக, இதனை ஒரு மறு இழப்பீடாக நான் கருதுவதுதான் எனது சொந்தத் தகுதிகளுக்கான அங்கீகாரமாகவும் நான் கருதுகிறேன். ஏதோ ஒரு வலுவான காரணத்திற்காக ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு கலைஞனும் தான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறான். எனவே, நானும்தான். ஆனால், உண்மையிலேயே நான் யார் என்பதோடு, உங்களது இந்த முடிவை உரசிப்பார்க்காமல் இந்த அங்கீகாரத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. மிகவும் இளவயதில் உள்ள மனிதன், அவனது கேள்விகள் மட்டுமே வளமானவை. மேலும், அவனது படைப்புகள் இன்னமும் படைப்பாக்க நிலையிலேயே உள்ளன. எப்போதும் படைப்பாக்கத் தனிமையிலேயே வாழக்கூடிய ஒருவன், அல்லது நண்பர்களின் அரவணைப்போடு மட்டுமே வாழ்ந்து வருபவன், இவை அனைத்தையும் கொண்ட அந்த மனிதனை முழுக்கத் தனிமைப்படுத்தி, முழு ஒளியும் அவன் மீதே குவியும் வகையில் மைய மேடையில் தூக்கியெறிந்து கணப் பொழுதில் இந்த விருது அறிவிப்பைக் கேள்விப்படும் அவன் கலவரப்படாமல் இருப்பது எப்படி சாத்தியமாகும்? மேலும், ஐரோப்பாவில் நிறைந்துள்ள பெரும் இலக்கிய மேதைகள், நிசப்த இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில், குறிப்பாக, அவனது தாய்நாட்டைச் சேர்நத இலக்கிய மேதைகள் முடிவில்லாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த விருதை ஏற்பதன் மூலம் அவன் என்ன மாதிரியான உணர்ச்சிகளை அடைந்துவிட முடியும்?
அதிச்சியையும், மனப் புயலையுமே நான் உணர்ந்தேன். அமைதியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நான், விரைவாக ஒரு மிகவும் செல்வச் செழிப்பான யோகம் வரவிருக்கிறது என்ற நம்பிக்கை நிலைக்கு வந்தாக வேண்டியிருக்கிறது. எனது சாதனைகளைச் சார்ந்து மட்டுமே நான் வாழ்ந்து விடமுடியாது. எனக்கு ஆதரவாக எதையும் நான் காணவில்லை. ஆனால், என் வாழ்க்கை முழுவதும் என்னை அரவணைத்தது எது என்றால், மிகவும் சிக்கலான தருணங்களில் கூட என்னை ஆதரித்தது எது என்றால், எனது கலையும், எழுத்தாளன் என்ற எனது பாத்திரமும்தான். இந்தக் கொள்கை என்னவென்று, மகிழ்ச்சியுடனும், நட்புடனுடன் உங்களுடன் பகிரிந்து கொள்ள அனுமதியுங்கள்.
என்னைப் பொருத்தவரை, எனது கலை இல்லாமல் என்னளால் வாழ இயலாது. அதற்காக, எல்லாவற்றிற்கும் மேலானதாக அதை இருத்தவில்லை. ஆனால், மறுபக்கத்தில் அது ஏன் எனக்குத் தேவைப்படுகிறது என்றால், என் சக மனதர்களிடம் இருந்து அது என்னைப் பிரிப்பதில்லை. நான் எவ்வாறு இருக்கிறோனோ அவ்வாறு நான் வாழ என்னை அது அனுமதிக்கிறது. நான் ஒரு அளவுவரை மக்களுடன் வாழ்கிறேன். பொது இன்பங்கள் துயரங்களின் உயர்ந்த சித்திரத்தை மக்களுக்கு வழங்குவதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அது நிகழ்கிறது. அதுதான் கலைஞன் விலகிச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்கிறது. மிகவும் நிதானமான மற்றும் மிகவும் உலகளாவிய உண்மைக்கு அதுதான் கலைஞனை உடபடுத்துகிறது. இதனால்தான் கலை என்னும் விதியைத் தேர்வு செய்யும் ஒருவன் அதனை அடிக்கடி விரும்புகிறான். ஏனெனில், அவன் தான் மிகவும் வித்தியாசமானவனாக இருப்பதாக அப்போது உணர்கிறான். இருந்த போதிலும் மிகவிரைவாகவே அவன், இந்தச் சமூகத்தைத் துறந்துவிட்டுத் தாமோ, கலையோ இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்கிறான். அதிலிருந்து தம்மைப் பிரித்துக் கொள்ள முடியாது என்பதையும் அவன் அறிகிறான். இதனால்தான், உண்மையான கலைஞன் என்பவன் எதையும் நேரடியாகக் கண்டிப்பதில்லை. தீர்ப்பு வழங்குவதைவிட புரிந்து கொள்வதையே அவர்கள் விரும்புகிறார்கள். மேலும், இவ்வுலகில் ஏதாவது ஒருபக்கம் சார்பு நிலை எடுக்க வேண்டிவந்தால், நீட்ஷேயின் பெரும் கூற்றுப்படி, நீதிபதி அல்ல படைப்பாளனே ஆளவேண்டும் என்ற அடிப்படையில் அவன் தொழிலாளியாக இருந்தாலும், அறிவு ஜீவியாக இருந்தாலும் அவனே ஆளத்தகுந்தவன் என்ற அடிப்டைப்பில், கலைஞர்கள் இந்த உலக சமுதாயத்தின் பக்கம் மட்டுமே அவர்கள் நிற்க வேண்டியுள்ளது.
இதே நிலைபாட்டின்படியே, எழுத்தாளனின் பாத்திரம் என்பது கடின உழைப்பில் இருந்து பிடுபட்டதாக இல்லை. எனவே, இன்றைய காலகட்டத்தில் வரலாற்றை உருவாக்குபவர்கள் பணியில் அவன் தம்மை இருத்திக்கக் கொள்ளக்கூடாது. மாறாக, அவற்றால் துயரப்படுபவர்களின் பணியால் தான் அவன் தம்மை இருத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், அவன் தன் கலையை இழந்து, தானும் தனிமைப் பட்டுப்போவான். லட்சக்கணக்கான விடைகளைக் கொண்ட ராணுவத்தால் கூட அவனை அத்தனிமையிலிருந்து மீட்க முடியாது. அதேசமயம், உலகின் மறுமுனையில் தொடுக்கப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகம் தெரியாத மனிதன் ஒருவனின் நிசப்தம், அக்கலைஞனை வெளியே கொண்டு வந்துவிடும்; குறைந்தபட்சம், விடுதலை வேட்கை உரிமைகளின் மத்தியிலாவது, தனது கலையின் மூலம், அந்த அமைதியைக் கருத்துக் கொண்டு குரல் என்பதை அவன் மறந்துவிடாமல் இருக்கச் செய்ய முடியும்.
நம்மில் யாருக்குமே இது எளிதான காரியமல்ல. ஆனால், வாழ்க்கைகளின் அனைத்துச் சூழல்களிலும், அது புகழ் குலைக்கப்பட்ட காலமாயிலும்சரி அல்லது தற்காலிக காலமாயினும் சரி, கொடுங்கோலாட்சியின் இரும்புச் சட்டங்களின் கீழ் அடைக்கப்பட்டிருந்தாலும் சரி அல்லது தற்காலிகமாக சுதந்தரக் காற்றைச் சுவாசிப்பதாக இருந்தாலும் சரி ஒரு எழுத்தாளன் நிச்சயமாக ஒரு வாழும் சமுதாயத்தின் இதயங்களை வெற்றி கொள்ள முடியும். இதன் மூலம் அவன் தமக்குத் தோமே நீதி செய்து கொள்கிறான். ஆனால், தமது செயல்பாட்டிற்குள்ள வரம்புகளை அவன் ஏற்றக் கொண்டுதான் செயல்பட முடியும். அது, அவனது எழுதுதிறனின் மிக முக்கிய இரு கடமைகளைக் கொண்டுள்ளது: உண்மை, விடுதலை என்ற அந்த இரு கடமைகளை அது கொண்டுள்ளது. ஏனெனில் அவனது கடமை மிகப் பெருவாரியான மக்களை ஒன்றிணைக்கக் கூடியதாக இருக்கிறது. அவனது கலை பொய்களுடனும், அடிமைத்தனத்துடனும் சிறிதும் சமரசம் செய்து கொள்ளக் வடாது; அது எங்காவது ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இதில் சமரசம் என்பது இல்லை; தனிமையை விதைக்கும் இந்த ஆட்சி அமைப்போடு சமரசம் கிடையாது என்பதுதான் கலைஞன் நிலை நமது தனிப்பட்ட பலவீனம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நமது கலைத்திறனின் வேர்கள் இந்த இரு முக்கியக் கடமைகளில் வேரூன்றியிருக்க வேண்டும். ஆனால், இவற்றைக் கடைப்பிடிப்பது என்பது கடினமானதுதான். தனக்குத் தெரிந்த ஒன்றைத் தெரியாது எனப்பொய் சொல்ல மறுக்க வேண்டும். அடக்குமுறைக்கு உறுதியாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். கலைஞனின் இரு முக்கியக் கடமைகள் இவைதான்.
கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வரும் நோய் பீடித்த இந்த வரலாற்றில், இக்காலக் கொடூரத்தால் எனது தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் போன்றே நானும் நம்பிக்கையிழந்துவிட்டபோதும், என்னைத் தொடந்து ஆதரித்து வந்த ஒன்று உள்ளது. என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டி வந்த அந்த உணர்வு நேர்மை தான்; ஏனெனில், இந்தச் செயல்பாடு என்று ஒரு கடமைப்பாடு ஆக இருந்தது. மேலும், இது எழுதுவதற்கான ஒரு கடமைப்பாடு மட்டுமல்ல. சிறப்பாக, எனது இருத்தல் மற்றும் எனது ஆற்றல்களின் கண்ணோட்டத்தின்படி, இந்தக் கடமைப்பாடு என்பது, இதே வரலாற்றுக் காலத்தினூடாக வாழ்வது கொண்டிருந்த அனைத்து மக்களுடன் சேர்ந்து, இந்த துயரங்களையும், நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொண்டதுமாகும். முதல் உலகப் போர் வெடித்த காலத்தில் பிறந்த இந்த மனிதர்கள், தாங்கள் இரு வயதைக் கடந்த போது ஆடவர் பதவிக்கு வந்ததைக் கண்டவர்கள், பிறகு முதலாம் புரட்சிகர விசாரணைகள் தொடங்கின. பின்னர் இந்தச் சூழலோடு அந்த மக்கள் மோத நேர்ந்தது. ஸ்பானிய உள்நாட்டுப் போரோடு அவர்கள் கல்வி முடிவுக்கு வந்ததுடன், இரண்டாம் உலகப்போர், வதை முகாம்கள் என ஐரோப்பா முழுவதும் சிறைச்சாலைகள் மற்றும் சித்ரவதைகளின் உலகமாகின; இந்த மனிதர்கள் இன்று – இன்றைய அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு மத்தியில் தங்கள் மகன்களை வளர்த்தெடுத்து, தங்கள் படைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். இவர்கள் நம்பிக்கையோடு வழ வேண்டும் என்ற யாருமே கேட்டுக் கொள்ளமுடியாது என்றே நினைக்கிறேன். அதிகமான விரக்தி நிலையில் இருக்கும் அவர்கள் நேர்மையற்ற முறையில் கலகம் செய்யும் தவறைப் புரிவதுடன், இந்தக் காலகட்டத்தின் நிலை மறுப்பு வாதத்திற்குள் (ய்ண்ட்ண்ப்ண்ள்ம்) வேகமாகச் சென்றடைவதற்கும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை, எந்த மறுப்பும் இல்லாமல் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். ஆனால், எனது நாட்டிலும் ஒரோப்பாவிலும் உள்ள நிலைமை என்னவென்றால், நம்முன் பெரும்பாலானவர்கள் நிலை மறுப்பு வாதத்தை நிராகரித்துவிட்டு, சட்டப்பூர்வ உரிமை பற்றிய கேள்வியில் நம்மை உடுபடுத்திக் கொண்டுள்ளோம். அவர்கள் தம்மைத் தாமே புனர் வாழ்வுக்கு – இரண்டாம் பிறப்புக்கு உட்படுத்திக் கொள்ளும் வகையில் இத்துயரமான காலகட்டத்தில் ஒரு வாழும் கலையை அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்ததந்திற்குத் தள்ளிப்பட்டிருக்கிறார்கள். மேலும், நமது வரலாற்றின் பணியில் மரணத்தை விரும்பும் உள்ளுணர்விற்கு எதிராகவும் அவர்கள் பகிரங்கமாகப் போராடவேண்டியுள்ளது.
ஒவ்வொரு தலைமுறையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்த உலகைச் சீர்திருத்தவே தாம் அழைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள் அது சீர்திருத்துவதற்கு அல்ல என்பதை என்னளவில் அறிகிறேன். ஆனால், அதன் கடமைப்பாடு என்பது அதைவிட மேலானது. இந்த உலகம் தம்மைத் தாமே அழித்துக் கொள்வதில் இருந்து தடுப்பதை அது உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு சீர்கெட்ட வரலாற்றின் வாரிசாக, தோல்வியில் முடிந்த புரட்சிகள். பைத்தியக்காரத்தனமாய் மாறிய தொழில்நுட்பங்கள் இழந்துவிட்ட கடவுள்கள், நார்-நாராகக் கிழிக்கப்பட்டுவிட்ட கொள்கைகள் ஆகியவற்றால் மூழ்கி, சீர்கெட்டுவிட்ட ஒரு வரலாற்றின் வாரிசாக, வெறுப்பு, ஒடுக்குமுறை ஆகியவற்றின் ஏவல்நாயாக எங்கு அறிவு குறுக்கப்பட்டுள்ளதோ அங்கு, எங்கு தரங்கெட்ட ஆட்சியாளர்கள் அனைத்தையும் அழித்துவிட்டு அதை எப்படி நியாயப்படுத்துவது என்று கூடத்தெரியாமல் இருக்கிறார்களோ அங்கிருந்துதான், தமது சொந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ள புதிய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கை மற்றும் மரணத்தை கவுரவத்துடன் வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை அதனோடும், இல்லாமலும் மீண்டும் ஸ்தாபிக்க வேண்டியுள்ளது. சின்னா பின்னமடைந்து வரும் ஒரு உலகில், கீர்த்திபெற்ற விசாரனை அதிகாரிகள் உலகம் முழுவதும் மரண ராஜ்ஜயம் ஏற்படும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கும் ஒர சகாப்தத்தில் தான் காலத்திற்கு எதிரான துயரமான போராட்டத்தின் ஊடாக நாடுகள் இடையே அடிமைத்தனம் இல்லாத அமைதியும், புதிய உழைப்பு மற்றும் கலாச்சாரமும், பரஸ்பர நம்பிக்கை இலயமும் உருவாக்கப்பட வேண்டும் என்பதை அது அறிந்து வைத்திருக்கிறது. இக்கடினமான பணியினை இத்தலைமுறையே நிறைவு செய்துவிடும் என உறுதியாகக் கூறமுடியாது. ஆனால், உண்மை மற்றும் விடுதலை என்ற இந்த இரட்டைச் சவால்களை ஏற்கனவே, உலகம் முழுவதும் எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது. மேலும், தேவைப்படுமாயின் இதற்காக நமது உயிரையும் எந்த வருத்தமுமில்லாமல் துறக்கவும் தயாராகிவிட்டார்கள். இவை எங்கெல்லாம் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் இவை எக்கப்படுத்தப்படுவதற்கும், வீரவணக்கம் செய்வதற்கும் தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக, எதற்கு அது தன்னைத்தானே தியாகம்செய்து கொள்கிறதோ அங்கு. எனவே, உங்களது உறுதியான ஒப்புதலுடன், நீங்கள் எனக்கு அளித்துள்ள கவுரத்தை இந்த விருதினை இத்தகைய கடமையில் உடுபட்டுள்ள புதிய தலைமுறைக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.
எழுத்தாளனின் திறன் மேதைமை குறித்த வரையரையை நிறைவு செய்யும் அதே நேரத்தில் அவனை அவனுக்குரிய இடத்தில் நான் நிறுத்தியாக வேண்டும். அவனுக்கு வேறு எந்த விதமான கோரிக்கையும் கிடையாது; ஆனால், தனது தோழர்களோடு தோளோடு தோளாகப் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் இவை: பாதிக்கப்படும் வாய்ப்பிலிருந்தும் உறுதி; அநீதி இழைக்கப்பட்டபோதும் நீதிக்கான ஆவல்; ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் தனது பணியை பெருமையோ, வெட்கமோ இன்றி மேற்கொள்ளுதலை, துயரம் – அழகு ஆகியவற்றிற்கு இடையில் வேறுபாடு கண்டு சிக்கிக் கொள்ளலாம்; இறுதியாக, வரலாற்றின் அழிவுப்பூர்வான இயக்கத்தில் நிலைநிறுத்த விடாப்பிடியாக முயன்று வரும் அவன், அவனது இரட்டை இருத்தலில் இருந்து படைப்புகளை, உருவாக்குகிறான். அவனிடிமிருந்து முழுமையான தீர்வுகளையும் உயர் ஒழுக்கங்களையும் எதிர்பார்ப்பது யார்? உண்மை புதிரானது, பிடிபடாதது, இருந்தாலும் பற்றக் கூடியது. விடுதலை அபாயகரமானது, அதோடு வாழ்வது கடினமானது என்றாலும் மகிழ்ச்சிகரமானது. இந்த இரு இலக்குகளை நோக்கியதான, வலியுடனும் அதே நேரத்தில் உறுதியுடனும் முன்னேறி, நமது தோல்விகளைக் கடந்து இப்பெரும் பாதையில் பயணிக்க வேண்டும் இத்தகைய உயிர் மதிப்பீடுகளின் பிரச்சாரகராக தம்மைத் தாமே தீர்மானித்துக் கிடைக்கும்? என்னைப் பொறுத்தவரை, நான் இந்த வகையானவன் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கூறவேண்டும். நான் வளர்ந்த சுதந்தரத்தையும், எனது மகிழ்ச்சியான இருப்பையும் ஒளியையும் கைவிட்டு விட என்னால் இயலவில்லை. ஆனால், இப்பழக்கம், எனது பல தவறுகளையும் பல குற்றங்களையும் விளக்கியபோதிலும் எனது கலைத்திறனை நன்றாக புரிந்து கொள்ள இது சந்தேகமில்லாமல் உதவியுள்ளது. சுதந்திரமான மகிழ்ச்சி இன்னமும் கனவாக இருந்தபோதும் இந்த உலகில் தமக்கு விதிக்கபட்ட வாழ்க்கையை அமைதியாக வாழும் அவர்கள் அனைவருக்கும் நிபந்தனையற்ற எனத ஆதரவினை அளிக்க இது உதவியுள்ளது.
இவ்வாறு நான் எப்படி இருக்கிறேனோ அவ்வாறு எனது நரம்புகளுக்கும், எனது கடன்களுக்கும், எனது ஏழ்மைக்குமாகக் குறுக்கப்பட்டுள்ள போதும், முடிவாக, பெருந்தன்மையோடு என்னைக் கவுரவிக்கும் வகையாக, நீங்கள் இந்த விருதை வழங்கியுள்ளதன் மூலம், நான் சுதந்திரமாக உணர்கிறேன். மேலும், இந்த போராட்டத்தில் என்னோடு பகிர்ந்து கொண்டு, எந்தவிதமான முன்னுரிமையும் பெறாமல், துயரமும், அவமரியாதைகளும் மட்டுமே பெற்று வந்த அவர்கள் அனைவருக்குமான கவுரவமாக இந்த விருதினைப் பெற்றுக் கொள்கிறேன் என்பதை உங்களிடம் கூறும் சுதந்திரமுள்ளவனாக இருக்கிறேன். இந்த நேரத்தில் எனது இதயத்தின் அடியில் இருந்து உங்களுக்கு நன்றி கூறவேண்டியது எனக்குப் பாக்கியிருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் முன்னிலையில் பகிரங்கமாகவும், எனது மன மகிழ்ச்சியின் அடையாளமாகவும் தெரிவிப்பது என்னவென்றால், ஒவ்வொரு உண்மையான கலை எனும் தனது அன்றாட அமைதியின் மூலம் திரும்பத் திரும்ப கூறும் அதே, ஆதிகால உண்மை உணர்வை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கிறேன்.
***
(டிசம்பர் 10. 1957)
