• பிரட்ரிக் ஜேம்சன்

 

பின்-நவீனத்துவத்தின் சிக்கல்களில்-அதன் அடிப்படையான பிரத்யேகங்கள் எவ்வாறு வியாக்கியானம் செய்யப்படுகின்றன என்பது ஒரு புறம். அதாவது முதன்மையானதாகவா, பயன்பாடுகளின் கருத்துருவாக்கமாகவா அல்லது முரண்பாடென ஒரு மருட்சியாகவா. அதே சமயத்தில் அழகியல் மற்றும் அரசியல்ரீதியான சிக்கல்கள் மறுபுறம். தர்க்கரீதியான பலவித நிலைப்பாடுகள், அவை எத்தகைய வரம்புகளில் முடிச்சிடப்பட்டிருப்பினும், வரலாற்றுப் பார்வைகளைத் தெளிவாக ஒளிரச் செய்வதற்காக காட்சிமைப்படுத்தப்படுகின்றன. அந்தப் பார்வை ஓட்டங்களில் இன்று நம்மை உயிர்ப்பிக்கும், உளப்பூர்வமாக அளவளாவும் தருணங்களின் மதிப்பீடுகளே, சாரம்மிக்க அரசியல் உறுதிப்பாடு மற்றும் துறவுகளின் உள்ளீடாக உள்ளன. உண்மையில், சர்ச்சைகளின் ஆற்றல்மிக்க அடித்தளக் கூற்று, நமது சமூகநெறி குறித்த துவக்கநிலைத் தந்திரம் படிந்த ஊகத்தின் மீது கவனம் கொள்கிறது. பின்-நவீனத்துவக் கலாச்சாரத்திற்கு வரலாற்று ஆதாரத்தை வழங்குவது என்பது, நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் அதைத் தோற்றுவித்த முந்தைய முதலாளித்துவ நடைமுறைகளுக்கும் இடையே உள்ள வேர்நிலைக் கட்டமைப்பின் வித்தியாசங்களை வலியுறுத்துவது தான்.

எனினும், பலவித தர்க்கரீதியான சாத்யப்பாடுகள், சிறப்பு வாய்ந்த நேர்த்தியான நவீனத்துவத்தின் மதிப்பீடுகள் என்றழைக்கப்படுகிற, மேலும் பின்-நவீனத்துவம் என்ற பெயர் குறிப்பீட்டில் பொறிக்கப் பட்டுள்ள மற்ற சர்ச்சைகளின் மீதான நிலைப்பாடுகளை உள்வாங்குதலுடன் தொடர்புப்படுத்தப் படுகிறது. உண்மையில், பின்-நவீனத்துவம் எனத் தோற்றமளிக்கக் கூடிய பலவித கலாச்சார போலிகளின் துவக்க நிலைகளைப் பட்டியலிடுகையில் சில பொதுவான உயர் நவீனத்துவ உந்துதல் மற்றும் அழகியல் உணர்வுகளில் ஒரு வகையிலோ அல்லது வேறு வகையிலோ எதிர்வினை இயல்புடன் எதிர்த்து நிற்கும் வெவ்வேறு போக்குகள் மற்றும் விளைவுகளின் ஒத்த தன்மையைத் தேடும் தூண்டுதல் வெகு வலுவுள்ளதாக உள்ளது.

பின்-நவீனத்துவ முகப்பு நிலைக் கலந்தாய்வு ஒரு பாணியாக இருப்பினும் கட்டமைப்புச் சர்ச்சைகள், மற்ற கலை வடிவங்களில் சில வேளைகளில் குறியீட்டுத் தன்மையுடன் அல்லது ஒப்பனைகளால் மூடப்பட்ட கலந்தாய்வுகளில் தப்பிக்க முடியாத மேலும் துப்பு துலக்க அனுமதிக்கின்ற அழகியல் வெளிப்பாடுகள் போலத் தோற்றம் தருகின்றவற்றின் அரசியல் அலையை உருவமைக்கும் தகுதிப்பாட்டை பெற்றுள்ளன. முழுவதுமாக, உள்ளீடு குறித்த சமீப உச்சரிப்புகளின் சார்பினத்திலிருந்து பின் நவீனத்துவம் மீதான நாலாவித பொது நிலைப்பாடுகளின் தொடர்புகளை முறித்து விடலாம். மார்க்ஸியத் தொலை நோக்கிலிருந்து அல்லது பொதுவான இடதுசாரிப் பார்வையிலிருந்து பேசப்படும் அரசியல் ரீதியான முன் எடுத்துச் செல்லலின் அல்லது எதிர்வினை பிரதிபலிப்பின் பாதிப்புகளான சாத்தியப்பாடுகளின் பதிவுகளால் இத்தொடர்புள்ள தெளிவான திட்டமிடல் அல்லது இணைதல் மேலும் சிக்கலாக்கப்படுகிறது.

சாரம் மிகுந்த எதிர் நவீனத்துவவாதியின் கோணத்திலிருந்து வருகை புரியும் பின் நவீனத்துவத்திற்கு வரவேற்பு தரலாம். கோட்பாட்டியலாளர்களின் முந்தைய தலை முறை குறிப்பாக இஹாப் ஹசன் ஏற்கெனவே இதைச் சாதித்திருப்பதாக, இசைவான பின்னமைப்புவாதச் சொல்லாடலின் வரம்புகளில் பின் நவீனத்துவ அழகியலுடன் கைகுலுக்குகையில் தோன்றுகிறது. (பிரதிநிதித்துவத்தின் கருத்தியல் மீதான Tel Quel தாக்குதல், ஹைடெக்கர் அல்லது தெரிதா போன்றோரின் “மேற்கத்திய உருமாறும் இயற்பியலின் எல்லையின் கோட்பாடுகளை உதாரணம் காட்டலாம்). அங்கே இன்னமும் பின் நவீனத்துவம் என அழைக்கப் படாதது இவ்வுலகில் முழுமையான புதிய போக்கிலான இருத்தல் மற்றும் சிந்தித்தலின் வருகையென வரவேற்கப் படுகிறது. (இதை ஃபோக்கலின் ”நிகழ்வுகளின் ஒழுங்கின்” நிறைவுப் பகுதியில் விவரிக்கப்படும் கற்பனாவாத குறி சொல்லலில் காணலாம்). எனினும், ஹஸனுடைய கொண்டாட்டங்களில், உயர் நவீனத்வத்தின் அதிகப்படியான அதீத அடையாளங்களும் உள்ளடங்குவதால், இது ஒரு தெளிவின்மையின் குரலென உள் வாங்கப்படும். (ஜாய்ஸ், மல்லார்மே). இது பிறகான தொழில் சமூகத்தின் அரசியல் ஆய்வறிக்கைக்கும் அதை அசை போடுதலுக்கும் இடையேயுள்ள ஒத்த தன்மைகளைக் குறிக்கும் புதிய தகவல் தொழில் நுட்பத்தின் கொண்டாட்டங்களுடன் கைகோர்த்தல் அல்ல.

இவை அனைத்தும் டாம் உல்ப்பின் “From Bauhaus to Our House” எனும் நூலில் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளன. தமது சுயமான புதிய இதழியல் மூலம் பின் நவீனத்துவத்தின் பல கூறுகளில் ஒன்றை வகுத்த ஒரு படைப்பாளரால் எழுதப்பட்ட சமீபத்திய கட்டமைப்பு சர்ச்சைகள் மீதான அறிக்கையினை உள்ளடக்கிய மற்ற வழியில் வெளித் தெரியாத புத்தகம் அது. ஆயினும் இப்புத்தகம் பற்றிய அடையாளம் மற்றும் கவன ஈர்ப்பு யாதெனில், பின் நவீனத்வ கற்பனாவாத கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாதது தான். மேலும் அதீத பதிவுகளுக்கு வெகுதொலைவில், மொழிவளத்தின் ஏளனம் நிறைந்த, வேறு வகையில் கட்டுப்பாடு மிக்க கூடாரத்தின் வாயிலாகச் சுவாசிக்கும் நவீனத்வத்தின் எளிதில் தெறிக்கும் வெறுப்பின் கலந்து கொள்ளாமையும் தான். இது ஒன்றும் புதிதல்ல, ஆனால் நிகழ்காலத் தொன்மையான உணர்ச்சி. இருபதாம் நூற்றாண்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயம் போல தூய வெண்மையான முதல் Corbusiers, ஒரு தட்டையான சிறிய மீனைப் போல ஒரு பக்கத்தில் இரண்டு கண்களுடன் கூடிய முதல் அவதூறுமிக்க பிக்காசோவின் தலை, Ulysses மற்றும் The Waste Land போன்றவற்றின் முதல் பதிப்பின் நிலை குலையச் செய்யும் “இருண்மை” என இது பின் நவீனத்வ நெருக்கடியின் முதல் மத்திய தரப் பார்வையாளர்களின் துவக்க அச்சமாக இருந்த போதும், இந்த அசல் philistines, spiessbuger (குறுகிய மனப்பான்மை கொண்டவன்), bourgeois (நிலப்பிரபு) அல்லது main street babbitry போன்றவற்றின் அருவருப்பு, நவீனத்வப் புதிய விமர்சனத்தின் கூறுகளை உட்புகுத்தி ஒரு கருத்துருவாக்கமிக்க வித்யாசமான ஊக்கத்துடன் திடுக்கெனத் திரும்பவும் உள் நுழைகிறது. அதன் விளைவுகள் முழுப் பரிமாணத்தில் மூல வடிவ அரசியலுடன், கற்பனாவாதத்துடன், தற்போதைய உயர் நவீனத்வ எதிர் நடுத்தரத் தூண்டுதலுடன் சமமான தொண்மை மிக்க இரக்க உணர்வு குறித்த புரிதலை வாசிப்போரிடையே வற்புறுத்துகிறது. உல்ப்பின் வசைச் சொற்கள் ஒரு பாடநூல் உதாரணத்தை இவ்வாறாக முன் வைக்கின்றன. நவீன அறிவார்த்த மற்றும் கோட்பாட்டுரீதியான உதாரணத்தைத் தெளிவாக கிளர்ச்சியுறுகிற கலாச்சார அரசியலின் மெருகூட்டலுக்குள் திரும்பப் பொருத்தவும் உந்தித் தள்ளவும் சாத்தியக் கூறுகள் உள்ளன. நகரத்து புதிய உணர்விலிருந்தும் உயர் நவீனத்வ மரபார்த்த நம்பிக்கையின் பெயரில் ஒளிந்திருக்கும் பொதுவான நகர வாழ்வின் பழைய வடிவங்களின் அழிவின் தற்போது கிரகிக்கக் கூடிய அனுபவத்திலிருந்தும் முன் நோக்கிப் பாயும் நவீன கூறுகளின் இயக்கவிசை சுழல்கிறது. எதிர் நவீனத்வம், சார்பெதிர் பின் நவீனத்வம் எனும் நிலைப்பாடுகள் தமது எதிர்நிலை எண்ணிக்கை மற்றும் அமைப்பாக்க மாறுபாடுகளை இணை அறிக்கைக் குழுவில் கண்டடைகின்றன. அவற்றின் நோக்கம் இன்னமும் பிழைத்திருக்கிற உயிர் நிலையான உயர் நவீனத்வ மரபின் நிதர்சனமான தாக்குதலின் மறு உறுதிப்பாட்டுப் பாதைகளில் பின் நவீனத்வத்தின் பாசாங்குத்தனத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் அவமானப் படுத்துவதுதான். ஹில்டன் க்ரேமர், துவக்க இதழான தமது The New Criterion பத்திரிகையில் வெளியிட்ட இரட்டை அறிக்கையில் இந்தக் கோணங்களைத் தெளிவாகவும் வெகு அழுத்தமாகவும் வியாக்யானம் செய்கிறார். குழுமனப்பாங்குமிக்க பின் நவனத்வத்தின் அடிப்படையான பொறுப்பற்ற தன்மை மற்றும் மேலெழுந்தவாரியான தன்மையுடன் முரண்படும் நவீனத்வ நினைவுச் சின்னங்கள் மற்றும் “தலை சிறந்த படைப்புகளின்” அறநிலை சார்ந்த பொறுப்புணர்வுகளை விவரிக்கிறார். பழுத்த வெளிப்படையான உதாரணம் என விளங்கும் உல்ப்பின் பாணியுடன் தொடர்புள்ள ”ஒருபக்கச் சாய்வையும்” விளாசித் தள்ளுகிறார் ஹில்டன்.

இதில் அதீத முரண் யாதெனில், அரசியல் ரீதியாக உல்ப்பும் க்ரேமரும் ஒத்த தன்மை பெற்றிருப்பதுதான். நவீன வகைப்பாடுகளின் சிரத்தையிலிருந்து அடிப்படையான எதிர் நடுத்தர வர்க்கப் போக்குகளையும் அரசியல் வடிவ உணர்ச்சிகளையும் க்ரேமர் அழிக்க முற்படும் போக்கில் குறிப்பிட்ட ஒருமைப்பாடின்மை தொனிப்பதாகத் தெரிகிறது. விக்டோரியத் தீண்டாமைகளின் மற்றும் குடும்ப வாழ்வின் மறுதலிப்புகளையும் பண்டமயமாக்கலின் மறுதலிப்புகளையும் கடவுளை மறுக்கும் முதலாளித்வத்தின் பெருகும் திணறலின் மறுதலிப்புகளையும் அவ்வுணர்வுகள் வெளிப்படுத்துகின்றன. இப்சனிலிருந்து லாரென்ஸ் வரை, வான்கோவிலிருந்து ஜேக்ஸன் பொல்லாக் வரை அவற்றை வெளிப்படுத்துவோரின் பட்டியல் நீள்கிறது. மாபெரும் நவீனத்வவாதிகளின் வெளிப்படையான எதிர் நிலப்பிரபுத்துவப் போக்குகளைக் கிரகிப்பதற்காக நிறுவனங்களாலும் கொடைகளாலும் மற்றும் பிரபுக்களாலும் நம்பிக்கைக்குரிய எதிர் நிலைகளுடன் ரகசியமாக வளர்க்கப்பட்ட க்ரேமரின் நுட்பமான பிரயத்தனம், சமிக்ஞைபூர்வ நம்பகத்தன்மை இருந்த போதிலும் இசைவான நவீனத்வக் கலாச்சார அரசியலின் முரண்பாடுகளால் நிச்சலனமாக முடுக்கி விடப்படுகிறது. அதாவது மூலதனத்தின் மீது ஓர் அடையாள உறவாகக் கற்புள்ள அரசியல் சுய பிரக்ஞையைத் தழுவும் போது, (உண்மையில் வெகு அரிதாக, ப்ரெக்டினுடையதைப் போல), பின் நவீனத்வவாதிகளின் மறுதலிப்புகள் அவர்கள் எதைத் துறந்தனரோ, எதை விரும்பினரோ அவற்றின் பிடிவாதத்தைச் சார்ந்துள்ளன.

எப்படியிருப்பினும், The New Criterion-ன் அரசியல் செயல்பாடு தெளிவுபடுத்தப்படும் போது, அறுபதுகளை நிராகரிப்பதற்கான, இறுதி ஆவணங்களின் எச்சங்களை நிராகரிப்பதற்கான, ஒரு வகையான புறக்கணிப்பிடம் முழு காலகட்டத்தை ஒப்படைப்பதற்கான பத்திரிகையின் குறிக்கோள் தெளிவு படுத்தப்படும் போது க்ரேமரின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வது எளிதானது. அது ஐம்பதுகள் முப்பதுகளுக்காகக் கண்டடைய யத்தனித்த அல்லது இருபதுகள் முதல் உலகயுத்த யுகத்தின் முந்தைய செழிப்பான அரசியல் கலாச்சாரத்திற்காக யத்தனித்த காலமாக இருந்தது. அதனால், சில புதிய பழமைவாத கலாச்சார இணைப் புரட்சியைக் கட்டமைப்பதற்காக எங்கும் நிறைந்த செயல்பாடுகளில் முன் நகரும் பிரயத்தனத்தில் The New Criterion தன்னையே செதுக்கியது. அப்புரட்சியின் வெளிப்பாட்டு எல்லை அழகியலிலிருந்து குடும்ப மற்றும் மதத்தின் உற்ற பாதுகாப்பு வரை நீண்டது. ஆனால், இது ஒரு முரணாகத் தொனிக்கிறது. சமகாலக் கலாச்சாரத்தில் நிறைந்த அரசியல் இருத்தலை எண்ணி இந்தச் சாரம் மிகுந்த அரசியல் செயல்தளம் அப்பட்டமாக வருத்தத்தை உணர்த்த வேண்டும். அறுபதுகளில் இந்நோய்க்கூறு நீண்டு பரவியது. நமது காலத்திய பின் நவீனத்வத்தின் அறநெறி சார்ந்த சபலத்திற்கு க்ரேமர் பொறுப்பாகிறார்.

பழமைவாதக் கோணத்திலிருந்து பார்க்கையில், மெக்கார்த்திஸத்தில் அல்லது பால்மர் தாக்குதலில் நடந்தது போல, ஒரு வெளிப்படையான இன்றியமையாதது எனத் தோன்றும் செயல்பாட்டின் சிக்கல் யாதெனில், எந்தக் காரண காரியத்திற்காகவும் காகிதப் பணத்தின் வார்த்தை ஜாலம் அரசு இயந்திரத்தின் தங்கக்கட்டிகளால் தாங்கப்படுவது போலத் தோன்றாததுதான். வியட்நாம் போரின் தோல்வி ஒரு தருணத்திற்காக சாத்தியமற்ற, நசுக்கும் அதிகாரத்தினால் நிர்வாண அணிவகுப்பை நடத்தியதற்காக எனத் தோன்றுகிறது. முப்பதுகளின் மரபுகளுக்கு எதுவும் தராத அல்லது முதல் உலகப் போரின் முந்தைய கால கட்டத்தைத் தெரியப்படுத்த ஒன்று குவிந்த நினைவுகளின் அனுபவத்தில் பிடிவாதத்துடன் அறுபதுகளை நிதி வசதிப் படுத்தியதற்காக எனவும் தோன்றுகிறது. க்ரேமருடைய ”கலாச்சாரப் புரட்சி” இவ்வாறாக அதிகமாக அடிக்கடி நழுவி ஐம்பதுகளுக்காகவும் ஈஸ்னோவர் யுகத்திற்காகவும் தளர்ச்சியான மற்றும் உணர்ச்சி மிக்க ஏக்கத்தில் வீழ்கிறது.

நவீனத்வம் மற்றும் பின் நவீனத்வம் மீதான முந்தைய நிலைப்பாடுகளின் வெளிச்சத்தில் இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல. உள்ளீடு குறித்த ஆழமான முன் நகர்தலுக்காக சமகாலக் கலாச்சாரக் காட்சியின் இந்த இரண்டாவது மதிப்பீட்டின் திறந்த நிலை கொண்ட பின்னது பழமைவாதக் கருத்தியலுக்கு மாற்றாகத் தகுதிப்பாடு மிக்கதாக இருக்க முடியும். இந்த நாடகப் பாங்கான திரும்புதலுக்காக நாம் ஹெபர்மாசஸுக்கு மிகவும் கடன்பட்டுள்ளோம், மேலும் உச்ச நவீன மதிப்புகளின் உறுதிப்பாட்டு மிச்சங்களின் மறு உச்சரிப்புகளுக்காகவும் பின் நவீனத்வக் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளைக் கைவிடுதலுக்காகவும். எவ்வாறாயினும் ஹெபர்மாஸுக்காக ஒரு நவீனத்வவாதியின் இச்சையைக் களங்கப்படுத்துவதற்கு கச்சிதமான மையமாக முழு பிரயத்தனம் மிக்க அரசியல்ரீதியான எதிர்வினைச் செயல்பாட்டை பின் நவீனத்வத்தின் இணை தன்னகத்தே கொண்டுள்ளது. நில உடைமையாளர்களின் விடிதலுடன் மற்றும் அதன் பிரபஞ்சரீதியான கற்பனாவாதத் துணிவுடன் ஹெபர்மாஸ் தன்னை இணைத்துக் கொள்கிறார். அடர்னோவின் உள்வெளியுடன் இருவரும் எதிர்கொண்ட சாரம் மிக்க மாபெரும் உயர் நவீனத்வ எதிர் நிலையான சிக்கலான கற்பனாவாத ஆளுமையினுள் ஹெபர்மாஸ் பறந்து திரியவும் அவதானிக்கவும் துடிக்கிறார். மற்றொரு புறம், 18-ம் நூற்றாண்டு விடிவெள்ளிக் காலத்தின் கிளர்ச்சியுடன் இவற்றின் முடிவுகளைக் கட்டிப் போடுவதற்கான அவருடைய பிரயத்தனம், உண்மையில் அடர்னோ மற்றும் ஹார்க்கீமரின் தளர்வான Dialectic of enlightenment-உடனான ஒரு தீர்மானம் மிக்க உடைபாடுகளைச் சுட்டி நிற்கிறது. அதில் இயற்கையை மீறிய ஆதிக்கம் மற்றும் பலத்தை நோக்கித் தவறாக வழிநடத்தப்பட்ட ஆசையெனத் தத்துவார்த்த விஞ்ஞானக் கலாச்சாரம் நாடக நிகழ்வாக்கப் படுகிறது. மேலும், நேரடியாகக் கொடிய தண்டனை முகாம் நோக்கித் திரும்பும் கறைபடியாத ஆழ்ந்த உலகப் பார்வையின் மேம்பாடுகளில் முதல் நிலையென அவர்களின் கடவுள் மறுப்புக் கூட்டங்களையும் சுட்டி நிற்கிறது. இந்த அதிரடிப் பிரிவு ஹெபர்மாஸின் சுய வரலாற்றுப் பார்வையாகப் பதிவு செய்யப்படுகிறது. அது ”விடுதலையின்” உறுதிப்பாடுகளை நிலைநிறுத்தும் தேடுதலாகும். மேலும், முதலாளித்வத்தின் வளர்ச்சியில் உணரப்படுகிற கருத்தியல்களின் தோல்விக்கு எதிரான முதல் பிரபஞ்ச ரீதியான நில உடைமையாளரின் கருத்தியலின் (சமத்துவம், குடியுரிமை, மனிதத்துவம், பேச்சுரிமை மற்றும் சுதந்திரமான வெளிப்பாட்டுத் தளங்கள்) சாரம் மிக்க கற்பனாவாத உள்ளீடுகளையும் நிலைநிறுத்துவதற்கான தேடுதலாகும்.

எவ்வாறாயினும் சர்ச்சையின் அழகியல் வரையறைகளுக்காக, பின்னதின் வழக்கழிந்த சில அனுபவச் சான்றிதழ்களால் ஹெபர்மாஸின் நவீனத்துவப் புத்துயிர்ப்புக்கு பதிலளிப்பது போதுமானதாக இருக்காது. ஹெபர்மாஸ் சிந்திக்கின்ற எழுதுகின்ற ஓரளவுக்கு நமது சுயத்திலிருந்து வித்யாசப்படுகிற தேசியச் சூழலின் சாத்யப்பாடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமுள்ளது. ஒருவகையில் மெக்கார்த்திஸம் மற்றும் நசுக்குதல் போன்றவை இன்றைய ஐக்கிய ஜெர்மானியக் குடியரசில் நிதர்சனங்களாக உள்ளன. இடதுசாரி அறிவுஜீவித்தன அச்சுறுத்தல் மற்றும் இடதுசாரிக் கலாச்சார மௌனம் (இது மேற்கு ஜெர்மானிய வலதுசாரிகளால் பயங்கரவாதத்துடன் தொடர்புப்படுத்தப் படுகிறது) வேறெங்கும் விட மேற்கில் அதிகமாக வெற்றிகரமான செயல்பாடென முழுமை பெற்றுள்ளன. புதிய மெக்கார்த்திஸத்தின் வெற்றியும், Spiessburger மற்றும் Philistine கலாச்சாரத்தின் வெற்றியும் இக்குறிப்பிட்டத் தேசியச் சூழலில் ஹெபர்மாஸ் சொல்வது சரியெனச் சொல்லப்படுகிற சாத்யப்பாடுகளை நல்குகிறது. மேலும் உயர் நவீனத்துவப் பழைய வடிவங்கள் எங்கேயோ தொலைத்த சிதைக்கும் ஆற்றலின் சில கூறுகளை இன்னமும் பாதுகாக்கின்றன. இந்த வகையில் அவ்வாற்றலை நலிவுறச் செய்யவும் மறைந்திருந்து வீழ்த்தவும் வழிதேடும் பின் நவீனத்வம் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் தமது கருத்தியல் ஆய்வை வெகுவாகத் தகுதிப்பாடு அடையச் செய்கிறது; அம்மதிப்பீடு பொதுத்தன்மை யற்றதாக இருந்த போதும்.

எதிர் நவீனத்வம் / சார்பெதிர் பின் நவீனத்வம் மற்றும் சார்பெதிர் நவீனத்வம் / எதிர் பின் நவீனத்வம் எனும் முந்தைய இரு நிலைப்பாடுகளும் நவீனத்வ மற்றும் பின் நவீனத்வத் தருணங்களினிடையே உள்ள சில முற்றொழுங்கான பிளவுகளின் அடித்தள இயல்பின் மீதான உடன்பாட்டிற்கு நிகரான புதிய பதத்தின் ஒப்புதலால் சிறப்பிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் இவ்விறுதி வாசகங்கள் கணிக்கப்படுகின்றன. இருப்பினும் மேலும் இரண்டு தர்க்கரீதியான சாத்யப்பாடுகள் உள்ளன. அவை ஒரு வரலாற்றுப் பிளவின் ஏதேனும் ஒரு கருவின் மறுதலிப்பைச் சார்ந்துள்ளன. ஆதலால் அவை மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ பின் நவீனத்வ வகைப்பாடுகளின் உபயோகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துகின்றன. பின்னதுடன் தொடர்புடைய படைப்புகள் குறித்து அவதானிக்கையில் அவை பெரும்பான்மையான நவீனத்வ இசைவைத் திரும்பவும் பின்பற்றும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதனால் பின் நவீனத்வம் நமது காலத்தில் மெய்யான நவீனத்வம் என உள்வாங்கப்பட்ட வடிவங்களை விடச் சற்று மேலானதாக உருமாற்றம் அடைகிறது. மேலும் புதுமையை நோக்கிய முந்தைய நவீனத்வவாதியின் தூண்டுதல் மிக்க சொல்லாடலின் தீவிரத்தன்மையுடன் மட்டுமே உருமாறுகிறது. (நான் இங்கே மேலும் ஒரு நிறுவனரீதியான சர்ச்சையைத் தவிர்க்க வேண்டியுள்ளது. மீண்டும் வலியுறுத்துவது போல, கடந்த 18-ம் நூற்றாண்டிலிருந்து நவீனத்வம் மற்றும் பின் நவீனத்வம் இரண்டும் உறுப்பமைப்பு நிலைகளாக மட்டுமே கண்டறியப்பட்ட கற்பனாவாத ஆழமான தொடர்ச்சியின் பரந்த நுட்பத்தினால் நவீனத்வத்தின் தொடர்ச்சி கேள்விக்குப்படுத்தப் படுகிறது).

இவ்வாறாக உள்ளீடு மீதான இரண்டு இறுதி நிலைப்பாடுகளும் உயர் நவீனத்வ மரபுக்குள் திரும்பவும் விழும் பின் நவீனத்வத்தின் ஐயமற்ற மற்றும் எதிர் மறையான மதிப்பீடுகளென தர்க்கரீதியாக நிரூபிக்கின்றன. புதிய நெருக்கடி நிலை நோக்கி, தற்போது பரவலாக “பின் நவீனத்வம்” என சிறப்பிக்கப் படுகிற மேலும் அடர்னோ ஆளுமைக்குள் நிஜமான முந்தைய உயர் நவீனத்வ மறு உறுதிப்பாடுகளின் மொத்தமாகவும் ஒரு பகுதியாகவும் கிரகிக்கப்படுகிற சமகால அல்லது அதற்குப் பிந்தைய கலாச்சார உருவாக்கத்தை நோக்கி ழீன்-ப்ரான்கோ லியோடார்ட் இவ்வாறு தமது இன்றியமையாத பொறுப்புணர்வை முன் வைக்கிறார். இந்த நுட்பமான திரிபு அல்லது மாறுதடம், பின்னதின் தரிசாக, ஆனால் ஓரளவுக்கு உயர்வாக அதை உருவாக்குகிற மற்றும் மீறுகிற, உயர் நவீனத்வ இசைவைப் பின்பற்றாத பின் நவீனத்வம் என அழைக்கப்படுகிற ஆய்வுத் திட்டத்தை அவரது சுய மொழிதலில் சிக்க வைக்கிறது. அதனால் நம்மைச் சுற்றியுள்ள பின் நவீனத்வம் திரும்புதலின் உறுதிமொழி என, மறுகண்டுபிடிப்பென பழைய ஆற்றலுடன் மற்றும் மலர்ச்சியான வாழ்வுடன் வளப்படுத்தும் சில உயர் நவீனத்வ கொண்டாட்டம் மிக்க திரும்ப வெளிப்படும் தோற்றம் எனத் தோன்றுகிறது. இது ஒரு குறி சொல்லும் போக்கு போலத்தான். அதன் அலசல் நவீனத்வ மற்றும் பின் நவீனத்வ எதிர் பிரதிநிதித்வ உந்துதல் மீது திரும்புகிறது. சமீபத்திய முதலாளித்வத்திற்கு (நமது பழைய அன்பர் -பிறகான தொழில் சமூகம்) அப்பால், புதிய சமூக அமைப்பின் சாரமுள்ள சமூக மற்றும் அரசியல் கருத்துருவாக்கம் குறித்து உரைப்பதால் லியோடார்ட்டின் அழகியல் நிலைப்பாடுகள் போதுமான அளவு அழகியல் வரையறைக்குள் மதிப்பிடப்பட முடியாதது. முழு வெளிப்பாடென புதிய சமூகத்தின் சாத்யப்பாடுகளிலும் உறுதிப்பாடுகளிலும் புதைந்த ஒரு குறிப்பிட்ட குறிசொல்லும் நம்பிக்கையிலிருந்து நவீனத்வ மீட்சியின் தொலைநோக்குப் பார்வையை அதன் அர்த்த தளத்தில் குறிப்பிடப்படும் பார்வையைப் பறிக்க முடியாது.

இந்த நிலைப்பாட்டின் தலைகீழ் மறுப்பு கருத்துருவாக்க ரீதியாக முதலாளித்துவச் சமூக வாழ்வின் சிதைவுகளின் மாதிரி என நவீனத்வ வடிவ லுகாக்ஸின் முந்தைய ஆய்விலிருந்து தற்போதைய உயர் நவீனத்வத்தைத் தெளிவாக உச்சரிக்கும் விமர்சகர் வரை நீண்ட ஒரு வகையான நவீனத்வக் கருத்தியல் துறவைத் தெளிவாகத் தழுவும். இந்த இறுதி நிலைப்பாடுகளை மேலே குறிப்பிட்ட எதிர் நவீனத்வத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது யாதெனில், சில புதிய பின் நவீனத்வக் கலாச்சார உறுதிப்பாட்டின் பாதுகாப்பிலிருந்து அது பேசுவதில்லை. ஆனால், அது ஓரளவுக்கு பின்னதை உயர் நவீனத்வ இசைவின் முன்னரே அவதூறு செய்யப்பட்ட தூண்டுதலின் சீர்கேடு என மட்டுமே ஆய்வு செய்கிறது. குறிப்பிட்ட இந்த நிலைப்பாடு வெனிஸ் கட்டிடக் கலை குறித்த வரலாற்றாசிரியர் மேன்பிரட்டோ தஃபூரியின் படைப்புகளுடன் எளிதில் தணிக்க முடியாத எதிர் நிலையின் நம்பிக்கையற்ற ஒளிர்வு மிக்க முரண்பாடாக இருக்கும். உயர் நவீனத்வத்தில் ‘மாதிரி அரசியல்’ விசை என நாம் அழைப்பதன் ஒரு பலமான குற்றச்சாட்டை அவரது பரந்துபட்ட ஆய்வுகள் அமைப்பாக்கம் செய்கின்றன. (அரசியல் இசைவுக்கான கலாச்சார அரசியலின் “கற்பனாவாத மாற்றீடு’- அதன் வடிவம், இடைவெளி அல்லது மொழியின் உருமாற்றத்தால் உலகை உருமாற்றம் அடையச் செய்யும் வேலைப்பாடு). தஃபூரி தனது எதிர் நிலையின் மருட்சிப்படுத்தாத பல்வேறு நவீனத்வங்களின் ‘ஆய்வுரீதியான’ தேர்ந்த அமைப்பியலில் குறைவான கொடூரத் தன்மையைப் பிரபலிக்கவில்லை. அவற்றின் செயல்பாடுகளை ஹெகலிய வரலாற்றுச் சூழ்ச்சியின் ஒரு வகைப்பாடென அவர் வாசிக்கிறார். அதில் நவீன இயக்கத்தின் சிந்தனையாளர் மற்றும் கலைஞர்களின் சில உடைப்புச் செயல்பாடுகள் மூலம் மூலதனத்தின் உபகரணப்படுத்தும் கடவுள் மறுப்பு போக்குகள் இறுதியாகத் தெளிவாக உள்வாங்கப் படுகின்றன. முந்தைய முதலாளித்துவ ‘ஒட்டு மொத்த’ அதிகாரத்தின் நிறுவன ரீதியான கட்டுப்பாடுகளுக்காக அடித்தளம் அமைக்கப்பட்டு இவர்களுடைய ‘எதிர் முதலாளித்வம்’ இவ்வாறாக முடிவுக்கு வருகிறது. மேலும் இது தர்க்கரீதியானது மட்டுமே. அதாவது, சமூக உறவுகளின் வேர்நிலை உருமாற்றத்திற்கு முன்புள்ள ஏதேனும் கலாச்சார வேர்நிலை உருமாற்றத்தின் சாத்யமின்மைகளை முற்கோளாகக் கொண்டு தஃபூரி இறுதியாக முடிவு செய்ய வேண்டியுள்ளது.

முந்தைய இருவித நிலைப்பாடுகளில் தோலுரித்துக் காட்டப்பட்ட அரசியல் எதிர்நிலை உணர்வுகள் சிக்கலான இவ்விரு சிந்தனையாளர்களின் நிலைப்பாடுகளுக்குள் பராமரிக்கப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. முன் குறிப்பிட்ட கோட்பாட்டாளர்கள் போல அல்லாமல் தஃபூரி மற்றும் லியோடார்ட் இருவரும் திறந்த நிலை வாக்குறுதிகளுடன் கூடிய பழைய புரட்சிகர மரபின் மதிப்புகளுக்கான வெளிப்படையான அரசியல் சித்திரங்கள். உதாரணமாக, புரட்சிகரப் போக்கின் குறிப்பிட்ட தன்மைக்கான சித்திரம் என தஃபூரியின் முழுக் கருத்துவாக்கக் கோட்டோவியம், நவீன மார்க்ஸிய மரபுடன் அதீதமாக ஒத்துப் போகையில், லியோடார்ட்டின் அழகியல் புதுமையின் உயர்தர மதிப்பு மிக்க படை அரண் அமைக்கின்ற ஒத்துழைப்பு புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பது தெளிவாக உள்ளது. இன்னமும் இருவரும் முழுமையாக எதிர் மார்க்ஸிய இசைவிலிருந்து வித்யாசப்படுகிற பிறகான மார்க்ஸிய நெறிகளுடன் குறிப்பிட்ட தந்திரமிக்க தருணங்களில் வெளிப்படையாகத் திரும்பவும் படைக்க வேண்டியவர்கள். உதாரணமாக, லியோடார்ட் அடிக்கடி அவருடைய “புரட்சிகர” அழகியலைப் புரட்சிகர அரசியலின் பழைய கருத்துருவாக்கத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட மிகவும் விழைந்துள்ளார். அதை அவர் ஸ்டாலினிசமாகவோ அல்லது தொன்மையானதாகவோ காண்கிறார். மேலும், தஃபூரியின் வருவதுரைக்கும் ஒட்டு மொத்த சமூக புரட்சியின் எண்ணம் முதலாளித்வ “ஒட்டு மொத்த ஒழுங்கமைப்பின்” கருத்துருவாக்கத்தை வெளிப் படுத்துகையில் புதிய பிறகான தொழில் சமூக ஒழுங்கின் நிபந்தனைகளுடன் ஒவ்வாததாகவும் காண்கிறார். அவ்வொழுங்கமைப்பு அரசியல் நிலைப்பாடற்ற எதிர்வினை புரிகிற காலகட்டத்தில் அடிக்கடி மார்க்ஸியவாதிகளை முற்றிலும் அரசியல் ரீதியான புறக்கணிப்பை நோக்கி வழிநடத்திய சோர்வுகளின் வகைப்பாடுகளுக்காக பேரிழப்பைக் கூட உறுதிப் படுத்தியது. (இந்த இடத்தில், முப்பது நாற்பதுகளைச் சேர்ந்த முன்னால் ட்ராட்ஸ்கிஸ்ட்களுடனும் அறுபது எழுபதுகளின் முன்னால் மாவோயிஸ்ட்களுடனும் ஹார்க்கீமர் மற்றும் மெர்லோ-பான்டி ஆகியோர் நினைவுக்கு வருகின்றனர்).

மேலே விவரிக்கப்பட்ட ஒருங்கிணைப்புத் திட்டம் இங்கே செயலாக்கரீதியாக பிரதிநிதித்துவப் படுத்தப் படுகிறது. கூட்டல் மற்றும் கழித்தல் குறிகள் கேள்விக்குட்படுத்தும் நிலைப்பாடுகளின் அரசியல் பூர்வமான முன்னேற்றம் அல்லது எதிர்வினைச் செயல்பாடுகளை இனம் காட்டுகின்றன.

 

 

இவ்விளக்கக் குறிப்புகளுடன் நாம் ஒரு முழு வட்டத்தை அடைகிறோம். கேள்விக்குட்படுத்தும் முதல் நிலைப்பாடுகளின் நிஜ உள்ளியல்பான அரசியல் உள்ளடக்கத்தை நோக்கி, குறிப்பாகப் பின் நவீனத்வத்தில் சார்லஸ் ஜென்க்ஸின் தகுதிப் பாடாக உள்ள (வென்சூரியுடையதும் மற்றவர்களுடையதும் கூட) குறிப்பிட்ட Populist (People Party அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவர்கள்) தாக்கு விசையின் கேள்வி நோக்கி, மேலும் தஃபூரியின் மார்க்ஸிய முழுச் சோர்வு மனப்பான்மையுடன் குறைத்து கணிக்கப்படுகிற சற்று போதுமான அளவுக்கு நம்மைப் பிரயோகிக்க அனுமதிக்கும் ஒரு கேள்வி நோக்கி நாம் திரும்ப முடியும். அழகியல் சர்ச்சையென அடிக்கடி நிகழ்த்தப்படுவதை வெளிப்படுத்தக் கண்டடையும் அதிகமான அரசியல் நிலைப்பாடுகள் என்பது பின் நவீனத்வத்தின் அரிய நிகழ்வின் மீதான இறுதித் தீர்ப்புகளை மேம்படுத்தத் தேடுதல் நடத்தும் நிதர்சனத்தில் அறநெறி சார்ந்தது என்பதை நாம் முதலில் உள்வாங்க வேண்டும்; பின்னது ஊழல் நிறைந்தது என அவதூறு செய்யப்பட்டாலும் அல்லது மறுபக்கம் புதுமையின் கலாச்சார அழகியல்ரீதியான ஆரோக்யத்தின் நிஜ வடிவம் என வரவேற்கப்பட்டாலும். ஆனால் அரிய நிகழ்வின் கன்னித் தன்மை மிக்க வரலாற்றுரீதியான மற்றும் சொல்லாடல்ரீதியான ஆய்வு, குறிப்பாக வாழ்தலும் போராட்டமும் நிரம்பிய காலம் மற்றும் வரலாற்றின் அருகாமை மீது கவனம் செலுத்தும் போது முழுமையான அறநெறி சார்ந்த தீர்ப்புகளின் உடைந்து போன பகட்டுத்தனத்திற்கு விருந்தளிக்க முடியாது. (ஹெகலின் பிரத்யேகமான ஒழுங்கமைப்பு குறித்து சமகாலத்தவரை வதைத்த) வரலாற்றுப் பார்வையின் நட்பு இல்லாத மற்றும் மானுடத் தன்மையற்ற ஆளுமையின் தருணத்தில் புற முகங்களை எளிதில் புரிந்து கொள்கிற அர்த்தத்தில் சொல்லாடல் நல்லது மற்றும் தீயதுகளுக்கு அப்பாற்பட்டது. குறிப்பிடப்பட வேண்டியது யாதெனில், நாம் பின் நவீனத்வக் கலாச்சார சூழலுக்குள் வசிக்கின்றோம். உவகையானதும் ஊழல் மிக்கதுமான அதன் எளிமையான கொண்டாட்டம் போல அங்கே எளிமை வாய்ந்த மறுதலிப்பு சாத்தியமற்றது.

இன்றைய பின் நவீனத்வம் மீதான கருத்தியல் தீர்ப்பு கேள்வியில் நனையும் கலைப்படைப்பு மீதான தீர்ப்பு போல நம்மீதான தீர்ப்பு தான் என நினைக்கலாம். எந்த போதுமான முறைமைகளாலும் பிரபஞ்ச அறநெறி சார்ந்த தீர்ப்புகளாலும் அல்லது தரம் தாழ்ந்த சம கூறுகளாலும் நவீன உளப்பகுப்பாய்வுகளாலும் நமது சுயமானதுபோல முழு வரலாற்றுக் காலகட்டம் கைப்பற்ற முடியாதது. மார்க்ஸியக் கோணத்தில் பார்க்கையில், எதிர்கால விதை ஏற்கெனவே நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் உள்ளது. அதிலிருந்து அலசல் மூலமாகவும் அரசியல் பதிலிகள் மூலமாகவும் கருத்தியல் ரீதியாகத் துண்டிக்கப்பட வேண்டும். (மார்க்ஸ் ஒரு முறை அதிரடிப் பதம் வாயிலாகக் குறிப்பிட்ட பாரீஸ் கம்யூன் தொழிலாளர்கள் “உணர்வதற்கு ஒரு நெறி இல்லை”- பழைய முதலாளித்வ சமூக உறவுகளிலிருந்து புதிய சமூக உறவுகளின் மேம்பாடடைந்த வடிவங்களைத் திறந்து விட மட்டுமே அவர்கள் தேடுகிறார்கள். அதில் முன்னவர் ஏற்கெனவே கிளர்ந்தெழத் துவங்கிவிட்டனர்). சிதைவுகளின் சில இறுதி அறிகுறிகளெனப் பின் நவீனத்வத் தன்னிறைவுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கவோ அல்லது புதிய தொழில் நுட்ப மற்றும் தொழில் முனைவோனின் கற்பனாவாத முன்னோடிகளென புதிய வடிவங்களை வரவேற்கவோ தூண்டும் தளத்தில் கலாச்சாரப் பொதுத் தரப்படுத்தலில் இயங்குகின்ற கருதுகோளுக்கு மத்தியில் ஒரு ஒழுங்கமைவென முந்தைய முதலாளித்துவச் சமூக மறுகட்டமைப்புடன் புதிய கலாச்சார உருவாக்கங்களை மதிப்பீடு செய்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

நெருக்கடி நிலைமை போல, உயர் நவீனத்வத்திலிருந்து அதன் Populist முதன்மைக் கூறுகள் வாயிலாகப் பின் நவீனத்வக் கட்டமைப்பு தன்னை வித்யாசப்படுத்துகிறது எனும் ஜென்க்ஸின் வற்புறுத்தல் துவக்க நிலையென சில பொதுவான கலந்துரையாடலுக்காகத் துணை புரியலாம். குறிப்பிட்ட கட்டிடக் கலைச் சூழலில் ஒரு Corbusier அல்லது ஒரு Wright-ன் அதீத உயர் நவீனத்துவ வெளி தான் உதித்த சிதைந்த நகர புறத்தோற்றத்தில் தென்படுவதிலிருந்து தன்னை வேர்நிலை ரீதியாக வித்யாசப்படுத்தலுக்கான தேடுதலை அர்த்தப்படுத்துகிறது. அதன் வடிவங்கள் இவ்வாறாக எல்லையற்ற பெருவெளிச் சூழலிலிருந்து தொடங்கும் வேர்நிலைப் பிளவின் பாவனையைச் சார்ந்துள்ளது. (புதிய வெளியின் அடிப்படையான பாதுகாப்புமிக்க novum-லிருந்து எழும் மாபெரும் வழிகாட்டியின் நாடகப்பாங்கான பிரிவு). ஒரு முரணெனப் பின் நவீனத்வவாதிகளின் அமைப்பாக்கம் அமெரிக்க நகர பிறகான அதீத நெடுஞ்சாலை உணவகங்கள் மற்றும் விரைவுணவக நிலக்காட்சியின் மற்றும் வணிகக் கீற்றின் பலவகையான புறத்தோற்றங்களுக்குள் அவர்களுடைய இடையீட்டைக் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் மறைமுக சைகையின் மற்றும் மரபார்த்த எதிரொலியின் நாடகக் காட்சி (“வரலாற்று வாதம்”) வேர்நிலை வித்யாசம் மற்றும் புதுமைகளிடம் உயர் நவீனத்வவாதிகளின் உரிமையைப் பறி கொடுத்து விட்டு சுற்றுப் புறத்திலுள்ள வணிகரீதியான படிமங்கள் மற்றும் வெளிகளுடன் இந்தப் புதிய கலை அமைப்பாக்க உறவுகளைப் பத்திரப்படுத்துகிறது.

புதிய கட்டமைப்புக் கலையின் சந்தேகத்திற்கிடமற்ற உட்பொருள் பொதிந்த செயல் வித்து Populist என வகைமைப்படுத்தப்படுகிறதா என்பது திரும்பவும் ஒரு திறந்த கேள்வியெனத் துளைக்கிறது. புதிய வணிகரீதியான கலாச்சார வெளிப்பாட்டு வடிவங்களை, குடியானவன் மற்றும் நகர்ப்புற தொழில் நுட்பக் கலைஞர்களின் பழைய சமூக நிலைகள் உயிர்ப்புடன் வாழ்ந்த தருணத்தில் செழுமையடைந்த கிராமிய இசை வடிவங்கள் மற்றும் “பிரபல” கலாச்சாரத்திலிருந்தும் மேலும் 19-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து படிப்படியாக காலனியாதிக்கத்தில் சிக்குண்ட, பண்டமயமாக்கல் மற்றும் சந்தைப் படுத்தும் ஒழுங்கு முறைகளால் அழிக்கப்பட்ட கலாச்சாரத்திலிருந்தும் திறந்து ஆய்வது அவசியமெனப் படுகிறது. இக்கலாச்சாரம் விளம்பர உத்திகளிலிருந்து தொடங்கி அனைத்துவித மரபார்த்த ஒட்டு மொத்த படையல் வரை நீள்கிறது – உற்பத்தி முதல் கட்டுமானம் வரை, கலைத் தன்மை வாய்ந்த பண்டங்களென தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (the logo) மேலும் விற்பனையின் சாகசம் நிகழ்த்தும் புத்தங்கள், திரைப்படங்கள் உட்பட.

உயர் கலாச்சாரத்திற்கும் பெருவாரியான கலாச்சாரம் என்று அழைக்கப்படுவதற்கும் இடையே உள்ள, சுய ஆளுமைக்காகச் சார்பு கொள்ளும் நவீனத்வத்தின் மீதான பழம் பெருமைகளையும் நடுத்தர மற்றும் இழிவான வணிகக் கலாச்சாரச் சுற்றுச் சூழலுக்கு எதிரான நம்புதலுக்குக் குறைந்த பட்சம் ஒரு பகுதி மட்டும் இசைந்திருக்கும் கற்பனாவாத செயல்பாடுகளையும் மறைத்து விடுதல் போல மற்ற கலை வடிவங்களில் வெகு தெளிவாகத் தோற்றம் தரும் இக்குறிப்பிட்டச் செயல் வித்தைகளின் பிரபஞ்ச நுழைவைக் குறைந்த பட்சமாகவேனும் அனுமதிக்க வேண்டும். உண்மையில் உயர் நவீனத்வ வெளிப்பாடு ஒரு தகுதிப்பாடடைந்த வெகுஜனக் கலாச்சாரத்தின் முதல் மாபெரும் விரிவாக்கத்துடன் உடனிருப்பது என விவாதிக்க இயலும். (ஒற்றைப் பிரதி மூலம் கலைத்தன்மை வாய்ந்த புதினமாகவும் வியாபார ரீதியாகவும் சாகசம் நடத்திய அடையாளமாக ஜோலாவைக் குறிப்பிடலாம்.)

இப்போது உறுப்பமைப்பாக்க வகைப்படுத்தல் உடைந்து போவதாகத் தோன்றுகிறது. இசை வடிவங்களில் ஸ்கோன்பெர்க்கிற்கு பிறகு, கேஜுக்குப் பிறகும் கூட Classical மற்றும் Popular எனும் இருவித எதிர்நிலை மரபுகள் ஒன்றில் ஒன்று மீண்டும் கலந்து விடத் துவங்கி விட்ட போக்குகளை நாம் முன்னரே பதிவு செய்து விட்டோம். ஓவிய வடிவங்களில் அதன் சுயத்துவத் தன்னியல்பு மிக்க சாளரம் எனவும் பாப் இசையில் அல்லது ஒளிப்பட நிதர்சனத்தில் சாரத்தின் நன்கு இழைக்கப்பட்ட தளம் எனவும் ஒளிப்படத்தின் மீட்சி அதே போன்ற செயல் முறைமையின் கடுமையான அறிகுறியாக ஒளிர்கிறது. எந்த நிலையிலும் புதிய கலைஞர்கள், ஃபிளாபெர்ட் செய்யத் துவங்கியது போல, வெகுஜன அல்லது பிரபல கலாச்சார மூலத்தை, சிதிலங்களை, அலங்காரங்களை எங்கும் எடுத்தாள்வதில்லை என்பது தெளிவாகிறது. பெரும்பாலான நமது பழமையான ஆய்வுரீதியான மதிப்பீட்டு ரீதியான வகைமைப்பாடுகள் செயலற்றதாகத் தோற்றம் தரும் குறிப்பீடுகளில் அவர்கள் தங்களை எப்படியாவது செருகிக் கொள்கிறார்கள். (நவீனத்வ வெகுஜனக் கலாச்சார வேர்நிலை வித்யாசங்களின் மீது நுட்பமாக வார்த்தெடுத்த வகைமைப்பாடுகள்).

பலவித பின் நவீனத்வ வருத்தத்தின் குமுறல்கள் மற்றும் அறிக்கைகளில் Populism-த்தின் முகமூடிகளை அணிவதும் அதன் சைகைகளை நெறிப்படுத்துவதும் நிதர்சனத்தில் நிச்சயமாகச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிற கலாச்சார லயம் பிசகிய ஓசையின் அனிச்சையான செயல் மற்றும் அறிகுறியாக இருப்பது மட்டுமே இந்த நிலைமையில் சாத்யமெனத் தோன்றுகிறது. அதில் வெகுஜன அல்லது வணிகக் கலாச்சாரம் என அவதூறு பேசப்பட்டது எதுவோ அது தற்போது புதிய மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட கலாச்சார ஆட்சிப் பிரதேசத்தின் எல்லைக்குள் வரவேற்கப் படுகிறது. எந்த நிலையிலும் அடிப்படையான மொழியியல் மறு ஒத்திசைவுக்காக, அதன் துவக்கநிலை ஆதாரம் (பொதுவாக “மக்கள்” என்று அழைக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு நிலப் பிரபுக்களின் பிரபல முன்னணி வகுப்பின் தற்காலிகக் கூட்டிணைப்பு) அழிகின்ற பொழுது, அரசியல் கருத்தியலின் எழுத்துக்களிலிருந்து கவர்ந்த வரையறைகளை எதிர்பார்க்கலாம்.

எனினும் அனைத்துக்கும் மேலாக இது ஒன்றும் புதிய கதை அல்ல. நிஜமாக, ஃப்ராய்டின் கனவு நிலை ஆய்வின் பன்முக மரபுகளினூடே பிறவற்றை அர்த்தப்படுத்தும் பாலுணர்வுக் கனவுகள் தவிர மற்ற அனைத்துக் கனவுகளும் பாலுணர்வு அர்த்தங்களை தமக்குள் புதைத்து வைத்துள்ளன எனும் கருத்தின் மீது தனியாக முட்டி மோதும் வல்லமை படைத்த அரூபமான பழங்குடியின கலாச்சாரத்தைக் கண்டடைந்த ஃப்ராய்டின் பெரு மகிழ்வை நினைவு கூற முடியும். ஆகவே இது கலாச்சார நிலைப்பாடுகள் அரசியலிலிருந்து மீண்டும் கலாச்சாரத்திற்கான சறுக்குதலை முன்மொழியும் ஒற்றைப் பரிமாண அரசியல் குறிப்பு தவிர்த்த அரசியல் அறநெறியின் குறியீட்டு வடிவங்களெனத் திரும்புமிடங்களில், பின் நவீனத்வச் சர்ச்சைகளில் அது இசைவு கொள்ளும் அரசியலற்ற ஆட்சி சமூகத்தில் தென்படுகிறது.

தன்னைத் தனக்குள் நிரப்பிய வகுப்பின் மற்றும் போதுமான தனிப் பேறு பெற்ற தனக்குள் உற்று நோக்கும் அல்லது தன் சுய கோட்பாடுகளுக்காக ஏற்பாடு செய்யும் எந்த இடத்தையும் உள்ளடக்கத் தவறிய உயிரியலின் வழக்கமான ஆட்சேபணை, வட்டத்தை முழுமையுறச் செய்யாமல் தனது வாலைத் தானே உண்ணுகிற ஒரு வித மோசமான அனிச்சைச் செயலென கோட்பாடுகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். உண்மையில் பின் நவீனத்வக் கோட்பாடு உள்முகம் நோக்கிய முடிவற்ற செயல் ஒழுங்கெனத் தோன்றுகிறது. உள் வாங்குபவரின் நிலைப்பாடு உட்புறத்திலிருந்து வெளி நோக்கித் திரும்புகிறது. மேலும் அட்டவணைப்படுத்துதல் நீண்ட பரப்பு மீது திரும்பவும் தொடர்கிறது. இவ்வாறாகப் பின் நவீனத்வம் பொதுவான வரலாற்றுணர்வின் சோர்வான பொறுமையை அனுமதிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. அங்கே சுய பிரக்ஞை பூர்வமான பிரயத்தனத்துடன் நமது சுயமான சூழல் எவ்வாறேனும் வரலாற்றுரீதியான புரிதலின் நடப்பை முழுமையுறச் செய்கிறது. அது தன் சுய பிரக்ஞையின் கருத்துருவிற்கு ஏற்ற தத்துவார்த்த மறுதலிப்பு நோக்கி பின்னதின் பலவித மறு அரங்கேற்றங்களின் விகாரமான கேளிக்கை போன்ற சூழலையும் கனவுகள் மற்றும் அருகாமையின் மோசமான நிலைகளில் இருப்பது போன்ற இருள் படிந்த சூழலையும் திரும்பத் திரும்ப உச்சரிக்கிறது. அதன் முடிவற்ற ஞாபகமூட்டல் புறத் தோற்றத்தை விழுங்கும் சாத்தான்தனமான, குறிப்பிட்ட பரப்பிலிருந்து மேலெழும் கூட்டல் மற்றும் கழித்தல் குறிகளின் தப்பிக்க முடியாத வடிவங்களில், கோட்பாடுகளிலிருந்து முன்னரே ஒதுக்கப்பட்ட அறநெறி சார்ந்த தீர்ப்பை இடைவிடாது வற்புறுத்துவதற்காக அரங்கேற்றப் படுகிறது. நுட்பமான தற்காலிக நடைமுறை முன்மொழியும் மற்றும் வருவது உரைக்கும் இறுதிநிலைப் பாங்கெனத் தென்படும் தெளிவான உதாரணம் என ஜ்வலிப்பதற்காகவும் திரும்ப வடிவமைப்பதற்காகவும் ஒரு “கோட்பாடென” கிரகிக்கப்படும் வரை அரிதாக நீடிக்கிறது. அதில் இந்த அறம் சார்ந்த தீர்ப்பு தன் வெளிப்புறத்தைக் கண நேரத்தில் பருக விழைகிற மேலும் தன் சுய புற எல்லைகளை உள்ளடக்கவும் விழைகிற ஒரு கோட்பாட்டினால் பொருத்தமான தன்னியல்புகளின் வரிசையில் நுழைக்கப் படுகிறது. இறுதியாகப் பின் நவீனத்வக் கோட்பாடு பிரவகிக்கும் தண்ணென்ற சுய மறு உருவாக்கத்தின் உள்ளார்ந்த விடுதலையைக் கொண்டாடும் அதீத நெருக்கமான பிரச்சாரம் போல தன் ஒழுங்கு நிலையின் மட்டத்திற்கு உயர்கிறது.

வெளிப்படையாகப் பரிந்துரைக்கப்படும் எளிமையான பின் நவீனத்வக் கோட்பாட்டை நிறம் மாறும் ஆவணத்தைத் தனிமைப்படுத்தும் ஒரு ஆயுதமென முன் வைக்கின்ற இச்சூழல்கள் எல்லையற்ற பிற்போக்குத் தனத்தின் சுய பச்சாதாபம் நோக்கித் திரும்ப நிர்ப்பந்திக்காத பெரிதும் ஒத்திசைகிற முறையான உபயோகம் சில தத்துவார்த்தப் போக்குகளைக் கோருகின்றன. இக்குறிப்பிட்ட புதிய மயக்கும் ஆட்சி எல்லைக்குள் போலியான சிக்கல் உண்மையின் உறைவிடம் எனத் திரும்புகிறது. அதனால் விளக்கவுரைகளால் நிராகரிக்கப்படும் நிபந்தனைகளுக்குள் அரசியல் கலையின் இயற்கைத்தனமான சாத்தியப்பாடற்ற கூறுகளின் மீதான பிரதிபலிப்பு கவனிக்கத்தக்கக் காலத்தின் மிக மோசமான போக்காக இருக்காது. உண்மையில் நான் கருதுகிறேன் (பின்வரும் பக்கங்கள் இதை உறுதிப்படுத்தலாம் அல்லது உறுதிப்படுத்தாமல் போகலாம்) – “பின் நவீனத்வ அரசியல் ரீதியான கலை” எந்தப் பழமையான அர்த்தத் தொனியிலும் கலை அல்ல. முதன்மையான இடத்தில் அது எவ்வாறு சாத்தியம் எனும் ஒரு முடிவற்ற ஊகமாக மட்டும் இருப்பதற்கு இணங்கியது.

விரிந்த இரட்டை நிலைப்பாடுகளை விடச் சகிக்க முடியாததெனக் கருதப்படுகிற, இரட்டை நிலைப்பாடு என்பது உபகரணம் போன்ற தவறற்ற அடையாளம் எனச் சொல்லப்படுகிற தகாதப் பயன்பாட்டிற்கெதிராக முன் கூட்டியே தடுப்புத் தன்மை வழங்கப்பட்ட நவீனத்வ / பின் நவீனத்வ இரட்டை நிலைப்பாடுகளைப் பொறுத்த வரை, தற்போதைய செயல்பாட்டிற்கு வருகை தராத ஆனால் அதனுடன் தொடர்புள்ள ஏதேனும் ஒன்றில் புழக்கத்தில் உள்ள மூன்றாம் பதத்தின் சேர்க்கை சாத்தியப்படலாம். இந்தத் தலைகீழாகத் திரும்பும் செயலாக்க வரைபடத்தை அதீத உற்பத்தித் திறன் வாய்ந்த கையடக்க வரலாற்றியல் ஒழுங்கு நிலைக்குள் வித்யாசங்களைப் பத்திரப்படுத்துவதற்காக நிலை மாற்றம் செய்யத் துணியலாம். அந்த மூன்றாவது பதம் – சரியாகச் சொல்லப் போனால் இந்தத் தருணத்தில் அதை “நிதர்சனத்வம்” என அழைக்கலாம் – புனிதமான இரகசியக் குறியீடுகளின் வாயிலாக தூய்மைப் படுத்தப்பட்ட விடிவெள்ளியிலிருந்து வெளிப்படும் சமயச்சார்பற்ற சான்றாதாரத்தை ஏற்றுக் கொள்கிறது. அதே நேரத்தில், மொழியும் சந்தைப்படுத்தலும் நவீனத்வ மற்றும் இம்ப்பீரியலிசத்தின் இரண்டாம் நிலையின் சரிவை உள்வாங்கச் செல்லும்முன் பொருளியல் ஒழுங்கமைவில் குடியமர்ந்த முதல் நிலைப்பாடுகள் மீது அது குற்றம் சுமத்துகிறது. இப்புதிய மூன்றாவது பதம் மற்றவற்றிற்கு முன்பே பலவித முன் முதலாளித்வத்திற்காக நான்காவது பதம் பணயம் வைப்பதைக் கைப்பற்றுகிறது. உதாரணமாகத் திரைப்படங்களில் போல, அல்லது ராக் இசையில் அல்லது கறுப்பின இலக்கியத்தில் போல, காலக்கிரம ஒழுங்கிலிருந்து அதன் காலவியலைத் தொகுத்து வழங்குவதாகத் தோன்றும் அதி அரூப மேம்பாட்டு மாதிரிகளுக்கு இப்புதிய மூன்றாவது பதம் உதவுகிறது. இங்கே அளவிடப்பட்ட இரட்டை நிலைப்பாடுகளின் முரண்களிலிருந்து மீட்கப்பட்ட புதிய செயல் ஒழுங்கமைவு காலம் கடந்து ஒரு வித அறிவார்த்த பயிற்சியை நல்குகிறது. புரிதலின் பாங்கென கால வரிசைப் படுத்த இறுதிக் கைமாறு செய்தலைத் தள்ளிப் போடக் கற்றுக் கொண்ட மொழியியல் கூறுகளின் வன்மையான சுய மறுதலிப்பையும் உள்ளார்ந்த மாற்று அடிப்படைக் கூறுகளைக் கொண்ட ஒத்திகை பார்க்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று பதங்களின் ஒழுங்கமைவில் ஈடுபட்ட மனநிறைவையும் நல்குகிறது.

நாம் செயல்புரிய முடியாத வரை ஒரு மூன்றாவது பதத்தை வரிசையில் இறக்குவதற்கான சில உரிமைப் பூர்வமான தயக்கத்தின் முகத்தில் (சேர்த்தெடுக்கப்பட்ட மற்ற இரு பதங்களைப் போன்ற உள்ளார்ந்த முரணென) பின் வரும் எளிமையான திடம் பொதிந்த பரிந்துரையை முன்மொழிய இயலும். உங்களுக்கு ஈடுபாடற்ற ஒரு நோக்கத்தைத் தீர்மானிக்க உங்களை நிர்ப்பந்திக்கும் புறத்தோற்றப் பார்வைபோல இரட்டை நிலையை சில அர்த்தங்களில் அதற்கு எதிராகவும் பயன் படுத்தலாம். ஆகவே பின் நவீனத்வத்தின் அனைத்து கூறுகளுக்குள்ளும் கடுமையாக நெறிப்படுத்தப் படும் ஒரு விசாரணை தன் சுய விருப்பத்திற்கு எதிராகவும் இசைவான நவீனத்வம் குறித்த சற்றேனும் உள்நோக்கமற்ற மாபெரும் ஒப்பந்தத்திற்கு எதிராகவும் தொடரும் பின் நவீனத்வம் குறித்த சிறிதளவு மதிப்பீடுகளையும் நமக்கு உரைப்பதை நிறுத்திக் கொள்ளும். மேலும், முதல் தளத்தில் அவ்விரண்டும் சமச்சீரான எதிர்நிலைகளென நம்பமுடியாதபோதும், ஒரு வேளை இவ்வெதிர் நிலை முரண் உண்மை எனவும் திரும்பக் கூடும். அவற்றிற்கு இடையேயான அதீத விரைவான மாற்றீடு, கொண்டாட்டம் மிக்க தோரணைகளை அல்லது அற நெறி சார்ந்த பழமையான பாணியிலான பதற்றம் கொப்பளிக்கும் சைகைகளைக் குறைந்த பட்சமாக, தளத்திற்குள்ளே உறைந்து போவதிலிருந்து பாதுகாப்பது சாத்தியம்.

***

தமிழாக்கம்: எம். ரவிச்சந்திரன்

பிரட்ரிக் ஜேம்சன் (Fredric Jameson : 1934 – 2024): அமெரிக்கப் பின்நவீனத்துவ ஆய்வாளர், மார்க்சிய அரசியல் கோட்பாட்டாளர், இலக்கிய விமர்சகர். கலாச்சார மோஸ்தர்களைப் பகுப்பாய்வு செய்பவர். டியூக் பல்கலைக்கழகப் பேராசிரியர். நிறுவனமாகிய முதலாளித்துவத்தின் அழுத்தத்தின் கீழ் உருவாகிய பண்பாட்டு வெளிதான் பின்நவீனத்துவம் என மொழிபவர். Postmodernism : The Cultural Logic of Late Capitalsim என்ற அவரது புகழ் பெற்ற நூலின் ஒரு அத்தியாயமே, இத் தமிழாக்கக் கட்டுரை.

***

பின் நவீனத்துவப் பிதாமகர்களில் ஒருவராக விளங்கிய  பிரட்ரிக் ஜேம்சன் (செப்டம்பர் 22 )நேற்று காலமாகிவிட்டார். அவரது மரணத்திற்கு  “தமிழி” செலுத்தும் அஞ்சலியாக, அவரது புகழ்பெற்ற இந்தக் கட்டுரையை தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறது.

***

இந்தக் கட்டுரை உட்பட, உலகளாவிய 50 பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களின் தலை சிறந்த 50 கட்டுரைகளை,  5 தொகுதிகளாகத் தொகுத்து, “பின்நவீனத்துவக்கோட்பாடுகள்” என்னும் தலைப்பில், உன்னதம் வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கின்றன.

********