- மஹாரதி
உபன்யாசம்ஆரம்பம்
குறுக்குநெடுக்குமாய்
‘மியாவ்’ என்றுபோனது பூனை
தூணில் கட்டப்பட்டது
சாமியார்கள்மாறினர்
மடம் மாறியது
உபன்யாசம் மாறியது
தூணில் பூனை இன்னும்
‘மியாவ்’ என்றுதான்
கத்திக் கொண்டிருக்கிறது.
***
என்னைக் கொலை செய்து
விட்டுப்போனவளின்
பாதங்களின் பின்னே
தவழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது
கொலை
***
எல்லாஅறைகளிலும்
நான்குடியிருந்தேன்
கடைசியாய்எந்த
அறையென்று ஞாபகமில்லை
